தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தாண்டு, தாவு, வெற்றிப்படி ஏறு!

தாண்டு, தாவு, வெற்றிப்படி ஏறு!

தாண்டு, தாவு, வெற்றிப்படி ஏறு!


PUBLISHED ON : அக் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

உங்களில் எத்தனை பேருக்கு வெளியே போய் விளையாடப் பிடிக்கும்? நிறைய பேருக்குப் பிடிக்கலாம். ஆனால், வழக்கமான பாடங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என்று ஒரே ஓட்டம். இதில் எங்கே வெளியே போய் விளையாடுவது? விளையாட போதிய இடம் இல்லை. இந்நிலையில், வேறு வழியில்லாமல்தான் நீங்கள் எல்லோரும் ஸ்மார்ட்போன்களோடு காலம் கழிக்கிறீர்கள்.

உங்களுடைய கவலைக்குத் தீர்வாக வந்துள்ளதுதான் 'சென்னை அப்ஸ்டக்கள் ரன்' (Chennai Obstacle Run) என்ற நிகழ்ச்சி. சென்னை, துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள டி.பி. ஜெயின் கல்லூரியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சி, முழுக்க முழுக்க மாணவர்களாகிய உங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 12 வகையான சவால்மிக்க தடைகளை, குழுவாக இணைந்து கடந்து வெற்றிபெற வேண்டும். இந்த சுவாரசியமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள விமல்ராஜிடம் பேசினோம்:

“சமூக வலைத்தளம், ஸ்மார்ட்போன், டி.வி. என்று பல்வேறு விஷயங்கள், மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால் அவர்களுக்கு பரந்துபட்ட உலகம் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை. அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் பி.டி. நேரத்தை தவிர, விளையாட நேரம் கிடைப்பதில்லை. அதுவும் பி.டி. நேரம், வேறு வகுப்புகளுக்காகவும் பல பள்ளிகளில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாணவர்களின் துடிப்பைத் தூண்டும்படியான விளையாட்டுகளை விளையாடினால் தான், அவர்களால் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்க முடியும். தடைகளைக் கடக்கும்போதுதான் அவர்களால் தன்னம்பிக்கையை அடைய முடியும். தடைகள் வெற்றியின் படிக்கட்டுகள். அதன் அடிப்படையிலேயே சவால்மிக்க தடைகளை அமைத்துள்ளோம். இடம் விட்டு இடம் தாவுவது, வலைக்குள் தவழ்வது, வேகமாய் ஓடுவது, கூரையைக் கடப்பது, கயிற்றில் ஏறுவது, சேற்றைத் தாண்டுவது, சறுக்குவது, குதிப்பது என்று 12 வகையான தடைகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்தப் போட்டியில், தனியாக இருந்தால் வெல்ல முடியாது. குழுவாக முயற்சி செய்தால்தான், ஜெயிக்க முடியும். அதுவும் போட்டியில் வெற்றி தோல்வி என்பதைவிட, போட்டியில் பங்குபெறுவதே வெற்றிதான் என்ற ரீதியில் விளையாட்டை உருவாக்கி வைத்துள்ளோம்.

3,000 மாணவர்கள் கலந்துகொள்ள உள்ள இந்நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. சென்னை, துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள டி.பி. ஜெயின் கல்லூரியில் நடக்கும் இவ்விளையாட்டில், மாணவர்கள் தங்கள் நேர வசதிக்கேற்ப பங்கேற்கலாம். மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 350 ரூபாயும், மாணவர்களுக்கு தலா 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us