உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 26, 2023

அ நிறம் | அளவு
உங்கள் தம்பியை அல்லது தங்கையை அசத்த ஒரு செயற்பாடு.
சதுரமாக இருக்கும் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு பக்கம் பச்சை கலரிலும், இன்னொரு பக்கம் மஞ்சள் கலரிலும் இருக்கட்டும். அல்லது இரு வேறு கலர்கள் உள்ள ஏதேனும் ஒரு காகிதம் கிடைத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
1. அதைப் படத்தில் காட்டி உள்ளபடி மடியுங்கள்.
2. மேலிருந்து கீழ் பாதியாக மடியுங்கள்.
3. வலமிருந்து இடமாக மடியுங்கள்.
4. இப்போது உங்களுக்கு ஒரு முக்கோணம் கிடைத்திருக்கும்.
5. முக்கோணம் கிடைத்ததா...இப்போது படத்தில் காட்டியபடி வெட்டிக் கொள்ளுங்கள்.
பிரித்தால், வலை வலையாக இருக்கும் பூக்கூடை கிடைக்கும். ரொம்ப ஈசியான செயல் முறையில் நீங்கள் செய்த வலைக்கூடையைப் பார்த்து உங்கள் தம்பி/தங்கை அசந்து போவார்.
