தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பசுமையைப் பேண....

பசுமையைப் பேண....

பசுமையைப் பேண....


PUBLISHED ON : ஜூலை 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய மாணவர்களுக்கு சூழலியல் பற்றி அக்கறை இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. அதனாலேயே பசுமையைப் பேண என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டிருந்தோம். இதே கேள்வியுடன் திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் துராபள்ளம், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களைச் சந்தித்தோம்.

இரா.நவீன்குமார்

தண்ணீர் தட்டுப்பாடு இருக்குற சூழல்ல, சொட்டுநீர் பாசனம் பத்தி விழிப்புணர்வு செய்யலாம். அதன்மூலம் செடி, கொடி, மரங்களை வளர்க்கலாம். மரங்கள் வளர, மழை வேணும், மழைக்கு மரங்கள் தேவைங்கிறது ஒரு சுழற்சி. அதனால் கிடைக்கும் நீரை சேமிச்சு பசுமையைப் பேணலாம்.

ஆ.தமிழன்பன்

இன்று கடைகளுக்கு வெறும் கையை வீசிட்டுப் போறோம். அந்தக் காலத்துல துணிப்பை, கூடை, பாத்திரங்கள் எல்லாம் கொண்டு போவாங்கன்னு வீட்டில் சொல்லிக் கேட்டிருக்கேன். இப்படி செஞ்சாவே, ஈசியா பிளாஸ்டிக்கை ஒழிச்சிடலாம்.

ச.மதுமிதா

ஆறு, ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில் இருக்கிற ஆக்கிரமிப்புகளைத் தூர்வாரி பராமரிச்சாலே போதும். நீர் வளம் பெருகும்; பசுமை தழைக்கும்; விவசாயம் சிறக்கும்.

கெ.ஷமிதா

நீர் வளங்களை ஒழுங்காகப் பாதுகாக்கணும். நகரங்களின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடையறதைப் போலவே அரசு, காடுகள் அழிவைப் பத்தியும் கவலைப்படணும். இயற்கையை அழித்து வரும் வளர்ச்சி, மனித உயிருக்கு அழிவு தரும்கிறதை உணரணும்.

ஆர்.அங்கீட்சிங்

நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பார்த்துக்கிறது முக்கியம். எல்லா கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைச்சிருக்காங்களான்னு சோதிக்கணும். பள்ளி மைதானங்களில் கொட்டும் மழை நீரையும் சேமிக்க வழி கண்டுபிடிக்கணும். நீர் ஆதாரம் பெருகினால், பசுமையைப் பேணுவது ரொம்ப சுலபம்.

ப.மோனேஸ்வரி

பசுமையைப் பாதுகாப்பது பத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில், பசுமைச் செயற்பாடுகளைச் சேர்க்கலாம். வகுப்புகள், கருத்தரங்கம், பயிலரங்கம் மூலம், இயற்கையின் அவசியத்தை மாணவர்கள் மனத்தில் விதைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us