PUBLISHED ON : ஜூலை 22, 2019

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் ஜெர்மனியில் நடந்தது. இதன் ஆண்களுக்கான 50 மீ. 'ரைஃபிள்-3' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், 1171.55 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அடுத்து நடந்த இறுதிப் போட்டியிலும் அசத்திய பிரதாப் சிங், 459.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இது, இம்முறை இந்தியாவுக்குக் கிடைத்த 10வது தங்கம்.
இம்முறை ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 10 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 24 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றியது. மற்ற போட்டிகளில் சரப்ஜோத் சிங் (10 மீ. 'ஏர் பிஸ்டல்'), அனிஷ் பன்வால் (25 மீ. 'ரேபிட் ஃபயர் பிஸ்டல்'), விஜய்வீர் சித்து (25 மீ. 'பிஸ்டல்') உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.
