தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாந்தி: “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” இதைப் பாடியது யாரென்று தெரியுமா மஞ்சு?

மஞ்சு: உனுக்கு இன்னா பிரச்ன சாந்தி? எப்போப் பாத்தாலும் ராவடி பண்ணினு கீற...

சா: அடிப்பாவி! அழகான பாரதியார் பாட்டப் பத்தி நான் கேக்குறேன். நீ புதுசா ஏதோ பேசுற!

ம: புத்ஸா நான் ஒன்னியும் பேசல. கெலம்பு, கெலம்பு காத்து வர்ட்டும்.

சா: நமக்குள்ள இருந்த நட்பு அவ்வளவுதானா? நான் கெளம்புறேன்டி.

ம: ஹ... ஹா... ஏய் சாந்தி போவாத. நான் ஒன்னக் கலாய்ச்சேன்.

சா: கலாய்ச்சியா? சரி சரி. சென்னைத் தமிழ எங்க கத்துகிட்ட? நல்லாப் பேசுற.

ம: பஜாருக்கு போவும்போது, அப்பறம்... டிராபிக்ல நிக்கும்போது எல்லாரும் பேசுறதக் கவ்னிச்சிருக்கேன்.

சா: அதுக்கே இப்படியா? சென்னையோட சிறப்புகள்ல, நீ பேசுன மெட்ராஸ் பாஷையும் ஒண்ணு, தெரியுமா?

ம: அப்படியா! இப்டிப் பெருமை பேசுற எடத்துலதான் 'அமுக்கிவாசி'ன்னு சென்னைத் தமிழ்ல சொல்றாங்க.

சா: எனக்கே பல்ப் கொடுக்குறயா. ஓவரா 'ஜபுரு காட்டாத' மஞ்சு.

ம: ஏய்! உனக்கும் பேசத் தெரியுமா? 'ஜபுரு'ன்னா என்ன சாந்தி? அர்த்தம் தெரியாததான் நா பேசினுக்கிறேன். எனக்கோசரம் அர்த்தம் சொல்லேன்.

சா: 'ஜபுர்' உருதுச் சொல். அதற்கு 'ஜால வித்தை'ன்னு அர்த்தம். சென்னைத் தமிழ் மட்டுமில்ல. மதுரைத் தமிழ், கொங்கு தமிழ்,

கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ்ன்னு நிறைய இருக்கு.

ம: ஆமா ஆமா. தாத்தாகூட அடிக்கடி கேப்பாரு “உன் சேக்காளி சாந்திகூட வெளாடப் போறீயா?”ன்னு.

சா: அது நெல்லைத் தமிழ். சென்னைத் தமிழ்ல 'தோஸ்த்'ன்னு சொல்றாங்க! சென்னைல பலமொழி பேசுறவங்க இருக்குறதால உருது, ஹிந்தி, இங்லீஷ்னு எல்லாம் கலந்த பாஷையா சென்னைத் தமிழ் இருக்கு!

ம: என்னதான் சிறப்பா இருந்தாலும் சென்னைத் தமிழை, கேலியாத்தான் பார்க்குறாங்க. தேவையானபோது பேசிட்டு அப்பறமா 'அப்பீட்டு' ஆகிடுறாங்க.

சா: ரொம்ப சரி. பம்பரத்தைச் சாட்டையால சுழற்றி மேலே எழுப்பிக் கையில பிடிக்கிறதுதான் அப்பீட். இது 'அப் ஹெட்' என்ற சொல்லுல இருந்து வந்தது.

ம: ஓகே சாந்தி. இப்போ நான் அப்பீட்டு ஆவுறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us