PUBLISHED ON : மார் 14, 2016

சாந்தி: ஏன் சோகமா இருக்கே?
மஞ்சு: அதுவா? அதுவந்து என்னோட லெதர்ல எதோ பிரச்னை. டாக்டரைப் பார்க்கணும்.
சா: லெதரா? என்ன சொல்றே?
ம: ஆமா தோலைத்தான் சொல்றேன். லெதர்னா இங்கிலீஷ்ல தோல்தானே!
சா: தோல்ல இருந்துதான் லெதர் கிடைக்குது. ஆனா மனுஷங்களோட தோலுக்குப் பேரு லெதர் அல்ல. 'ஸ்கின்'னுன்னு சொல்லணும்.
ம: அப்ப லெதர்னா என்ன?
சா: சொல்றேன். அதுக்கு முன்னால ஸ்கின்னுக்கும் (Skin) ஹைடுக்கும் (Hide) வித்யாசம் தெரிஞ்சுக்க. சிறிய விலங்குகளோட தோலுக்கு ஸ்கின்னுன்னு பேரு. நாம எல்லாம் அந்த லிஸ்ட்தான். பெரிய விலங்குகளோட தோலுக்கு ஹைடுன்னு பேரு. மாடு எருமையெல்லாம் அந்த லிஸ்ட். செத்துப்போன மிருகங்களோட தோலில்தான் லெதர் செய்யப்படுது.
ம: அப்படியா? நானும் லெதர் பேக் எல்லாம் பார்த்திருக்கேன். அதெல்லாம் எப்படி செய்யறாங்க?
சா: தோல்ல பொருட்கள் செய்யறதுக்கு முன்னாடி அதைப் பதப்படுத்தறது முக்கியம். 'டானின்' (Tannin) அப்படிங்கற அமிலப் பொருளை வைத்து பதப்படுத்தற முறைக்கு 'டானிங்'ன்னு பேரு…
ம: எல்லா ஊர்லயும் தோல் பதனிடுவாங்களா?
சா: தமிழ்நாட்டுல சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களில தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருக்கு. ஊர்கள்னு எடுத்துக்கிட்டா… திருச்சி, திண்டுக்கல், சென்னை, வேலூர், ராணிப் பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் …
ம: ஆம்பூர்ல பிரியாணி மட்டும்தான் ஃபேமஸ்ன்னு நினைச்சேன்.
சா: எதுல கவனமா இருக்கணுமோ அதுல கவனமா இருக்கே. சரி… ஸ்கின் டாக்டர் எல்லா ஊர்லயும் இருக்காங்க. வா! போய்ப் பாத்துட்டு வரலாம்.
