தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொக்கை மஞ்சு... ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு... ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு... ஷார்ப் சாந்தி


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாந்தி: என்ன மஞ்சு, கூலிங் கிளாஸ், குடைன்னு புது ஸ்டைல்ல இருக்கே?

மஞ்சு: ஸ்ஸ்ஸபா... வெயில்ல இருந்து எப்படித்தான் தப்பிக்கிறது?

சா : உன்னை எல்லாம், குவைத், சவுதி மாதிரி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு மாசம் அனுப்பி வைக்கணும்.

ம : ஐ... அந்த நாடுகளுக்கெல்லாம் டூர் போறதா? ஜாலியாப் போவேனே...

சா : ம்... ஜாலியா? அந்த மாதிரி எண்ணெய் வளமிக்க நாடுகள்ல வெயில் காலம் ரொம்பக் கொடுமையா இருக்கும்.

ம : அதானே பாத்தேன். என்மேல உனக்கு அப்படி என்ன கோபம்? நல்ல ஃப்ரெண்டுன்னா புதுசா வந்துருக்கிற ஏ.சி. ட்ரெஸ் வாங்கித் தரணும்.

சா : அது வேறயா உனக்கு? எல்லாருக்கும் ஏ.சி., ஃபிரிட்ஜ் தேவைதான். ஆனா, அதுல இருந்து வர்ற குளோரோ புளோரோ கார்பன் (CFC) வாயுதான் குளோபல் வார்மிங்குக்கு முக்கியக் காரணம்.

ம : என்னதான் வார்மிங், நமக்கு வார்னிங் கொடுத்தாலும் ஏ.சி., ஃப்ரிட்ஜ் இல்லாம வெயில் காலத்துல இருக்க முடியுமா?

சா : அதுக்குத்தான் அதிகமா மரங்களை வளக்கணும்னு சொல்றாங்க. குளுகுளுன்னு காத்தும் கிடைக்கும், இயற்கையும் அழியாது.

ம : என்னதான் சொல்லு! இந்த வருஷம் வெயில் அதிகம்தான்.

சா : எல்லா வருஷமும் இப்படியேதான் சொல்லுவாங்க. ஆனாலும், இப்ப வந்துக்கிட்டு இருக்கிற வெயில் மழைக்கு எல்லாம் காரணம் 'எல் நினோ.' அந்தக் காற்றுச் சுழற்சியினாலதான் பசிபிக் கடல்ல வெப்பநிலை அதிகமாகி வறட்சியும் பெரிய மழையும் உருவாகுது.

ம : 'எல் நினோ'ன்னா 'குட்டிப் பையன்'னுதானே அர்த்தம்? அவன்தான் சென்னைல பெஞ்ச பெரிய மழைக்கும் காரணம்ன்னு சொன்னாங்களே...

சா : ஆமாம் மஞ்சு, ரொம்ப சரியா சொல்லிட்டே! சும்மாவே கோடைக் காலத்துல பகல் பொழுது நீளமாவும் இரவு குறைவாவும் இருக்கும். இதுல அந்தச் சூரியனும் நம்மளைச் சுட்டெரிக்கப் போகுது.

ம : எது எப்படியோ... கோடைக் காலத்துல சூரியனுக்கும் கொண்டாட்டம், லீவ் கிடைக்கிறதால நமக்கும் கொண்டாட்டம்.

சா : கொண்டாட்டம்னு அசட்டையா இருந்துடாதே... இந்தக் கோடையை சமாளிக்க நிறையத் தண்ணி குடிக்கணும், நீர்ச்சத்து உள்ள பழங்கள் சாப்பிடணும்.

ம : ம்ம்ம்... வெளியில எங்கேயும் டூர் கூட்டிட்டுப் போகலைன்னாலும் வெயிலுக்கு நல்ல டிப்ஸ் சொல்ல உனக்குத் தெரியது. எனக்குத்தான் 'நண்பேன்டா'வை பெண்பால்ல எப்பிடிச் சொல்றது தெரியலை...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us