தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அயல்மொழி அறிவோம்: ஆங்கிலம் தெரிந்தால், ஸ்பானிஷ் எளிது!

அயல்மொழி அறிவோம்: ஆங்கிலம் தெரிந்தால், ஸ்பானிஷ் எளிது!

அயல்மொழி அறிவோம்: ஆங்கிலம் தெரிந்தால், ஸ்பானிஷ் எளிது!


PUBLISHED ON : மே 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குவாண்டோஸ் அஞ்ஞோஸ் டியன்னேஸ்? (Cuántos años tienes?). என்ன கேட்கிறேன்னு புரியுதா? ஸ்பானிஷ் மொழியில 'உங்கள் வயது என்ன'னு கேட்டேன். உலகத்துல அதிகமா பேசப்படற மொழிகளில இரண்டாவது இடம் ஸ்பானிஷ்ஷுக்கு. ஸ்பெயின் நாட்டுல மட்டுமில்ல, லத்தீன் அமெரிக்க நாடுகளில ஆட்சி மொழியா இருப்பது ஸ்பானிஷ் தான். இப்போ பிரெஞ்சு, ஜெர்மன், சீனம், ஜப்பானிய மொழிக்கு அடுத்து ஸ்பானிஷ் மொழி கத்துக்க நிறையபேர் ஆர்வமா இருக்காங்க.

அயல்மொழிகள் சொல்லித்தரும் பள்ளியான ஸ்பார்லிங்குவாவில் (Sparchlingua) ஸ்பானிஷ் மொழி பயிற்றுநர் சுதா சுரேஷ். இதோ அவரிடம் பேசியதிலிருந்து:

ஸ்பானிஷ் மொழி பிரபலமாக என்ன காரணம்?

மற்ற அயல்மொழிகள் பல ஆண்டுகளாக இந்தியாவுல புழக்கத்துல இருக்கு. சமீபகாலமா, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரிச்சுட்டு வருது. அதனால ஸ்பானிஷ் மொழியைக் கத்துக்கறவங்களோட எண்ணிக்கை அதிகரிச்சு இருக்கு. இந்த மொழி பத்தின விழிப்புணர்வும் கூடிட்டு வருது.

இதைக் கற்றுக்கொள்வது எளிதா?

ஆங்கில மொழி தெரிந்தால், ஸ்பானிஷ் மொழியை எளிதில் கற்றுக்கொள்ளலாம். பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தாலும், சுலபமாக ஸ்பானிஷ் மொழி, அதனுடைய ஒலி ஆகியவற்றை கற்றுக்கொண்டுவிடலாம். உதாரணமாக ஆங்கிலத்தில் எங்கெல்லாம் 'ஏபிள்' என்று சொல் முடிகிறதோ, அங்கெல்லாம் 'ஆப்ளே' என்று ஸ்பானிஷ் மொழியில் சொற்கள் முடியும். இப்படி நிறைய வார்த்தைகளுக்கு ஒற்றுமை உண்டு. இப்படி வேறு ஒரு மொழியோடு இருக்கும் ஒற்றுமைகளை வைத்து கற்றுக்கொண்டால், எளிதில் ஸ்பானிஷ் கற்றுக் கொள்ளலாம்.

உங்கள் பள்ளியில் எப்படி சொல்லிக் கொடுக்கிறீர்கள்?

மூன்று பிரிவுகளாக பிரித்திருக்கிறோம். சிறுவர்களுக்கான பிரிவில் 6--12 வயது வரை உள்ளவர்களைச் சேர்த்துக்கொள்கிறோம். அடுத்து, வளரிளம் பருவத்தினருக்கான பிரிவில், 13--21 வயது வரை உள்ளவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம். மூன்றாவது பிரிவு பொதுவானது. 21 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும், கற்றுக்கொள்ளலாம்.

புத்தகங்களை வைத்து சொல்லித்தருவது இல்லை. ரைம்ஸ், பாடல்கள்னு குழந்தைகளுக்கு ஏத்தமாதிரி சொல்லித்தறோம். நிறைய செய்முறை பயிற்சிகள் தரும்போது குழந்தைகளுக்கு மனசுல நல்லா பதியும். உங்களுக்கு இன்னும் தெளிவா சொல்லனும்னா, தாய்மொழியை எப்படி கத்துக்கிட்டீங்களோ அதேமாதிரிதான் நாங்க சொல்லித்தர முயற்சி பண்றோம். அதனால ஸ்பானிஷ் கத்துக்கிறதுல கஷ்டப்படவே வேண்டாம்.

தொடர்புக்கு:

சுதா சுரேஷ், ஸ்பார்லிங்குவா (Sparchlingua)

காசி ஆர்கேட், கடை எண் 15, முதல் தளம்,

116, சர் தியாகராயர் சாலை, தி.நகர், சென்னை--17

தொலைபேசி: 073388 53701

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us