தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செய்தி அறிவோம்: செவ்வாய் கிரகம் போன ரோபோவுக்கு என்னாச்சு?

செய்தி அறிவோம்: செவ்வாய் கிரகம் போன ரோபோவுக்கு என்னாச்சு?

செய்தி அறிவோம்: செவ்வாய் கிரகம் போன ரோபோவுக்கு என்னாச்சு?


PUBLISHED ON : அக் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 'ரோபோ' இயந்திரம், அங்கு தரையிறங்கியதா என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன், ரஷ்யாவுடன் இணைந்து, ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாயில் உயிரினங்கள் உள்ளதா என்பதை அறிவதே ஆய்வின் நோக்கம். அந்த விண்கலம் கடந்த அக்டோபர், 19ஆம் தேதி, செவ்வாய் கிரகத்தை அடைந்தது. விண்கலத்தில், 'ஷியாபரேல்லி லேண்டர்' என்கிற 'ரோபோ' பொருத்தப்பட்டிருந்தது. அந்த ரோபோவை, செவ்வாயில் தரையிறக்கி ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். அந்த ரோபோ, செவ்வாய் கிரக காற்று மண்டலத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ரோபோ மாயமாகிவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரக வளி மண்டலத்துக்குள் இறங்கும்போது, ரோபோவின் வேகம், மணிக்கு, 20,000 கிலோமீட்டரில் இருந்து, பூஜ்ஜியமாக குறைந்திருக்க வேண்டும். அப்படி குறைக்க முடியாததால், அது, செவ்வாய் கிரக தரையில் மோதியிருக்கலாம் என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதேபோல், 2003ஆம் ஆண்டில் பீகள் 2 (Beagle 2) என்ற சிறிய ரோபோ, செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. ஆனால், அது பழுதாகியதால், அத்திட்டம் தோல்வியடைந்தது.

cnet.com/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us