
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில், முதலில் விளையாடிய பெங்களூரு அணிக்கு அதிரடி காட்டிய கேப்டன் கோஹ்லி, இந்த சீசனில் 4ஆவது சதம் அடித்தார். பெங்களூரு அணி 15 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டும் எடுத்து, 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இந்தத் தொடரில் இதுவரை கோஹ்லி, 136 போட்டியில் 4 சதம், 24 அரைசதம் என 4002 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், 4 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

