PUBLISHED ON : ஜூன் 18, 2018

வண்டல் மண்
ஆற்றுப்படுகைப் பகுதிகளில் காணப்படும். மிகவும் வளமான மண்.
விளையும் பயிர்கள்: நெல், வாழை, கரும்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறு
கரிசல் மண்
பூமியிலிருந்து வெளிவந்த பாறைக்குழம்பு படிதலால் ஏற்பட்டது. நீரின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை உடையது.
விளையும் பயிர்கள்: பருத்தி, நெல், வாழை, கரும்பு, கிழங்கு வகைகள் செம்மண் சிவப்பு நிறமாக இருக்கும் இந்த மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது. எல்லா வகையான பயிர்களும் நன்கு வளரும்.
விளையும் பயிர்கள்: பருத்தி, சோளம், கம்பு, துவரை, கேரட், பீட்ருட், கிழங்குகள்
சரளை மண்
இந்த மண் பாறைப்பரல்களால் ஆனது. மலைப்பாங்கான பிரதேசத்தில் காணப்படும்.
விளையும் பயிர்கள்: சோளம், கம்பு, ஆமணக்கு, திணை வகைகள்
பாலை மண்
இவை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.
மண்டலம் வாரியாக மண் வகைகள்
வடகிழக்கு மண்டலம்
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மணற்பாங்கான செம்மண், களிமண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண்
வடமேற்கு மண்டலம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் (சில பகுதிகள்) சுண்ணாம்புத் தன்மையுள்ள செம்மண், சுண்ணாம்புத் தன்மையுள்ள கரிசல் மண்
மேற்கு மண்டலம்
ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, கரூர் (சில பகுதிகள்), நாமக்கல் (சில பகுதிகள்), திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் (சில பகுதிகள்) இருபொறை செம்மண், கரிசல் மண்
காவிரிப் படுகை
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் பகுதிகள் இருபொறை செம்மண், வண்டல் மண்
தெற்கு மண்டலம்
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கடலோர வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண்
அதிக மழை மண்டலம்
கன்னியாகுமரி கடலோர உவர்தன்மையுள்ள வண்டல் மண், ஆழமான இருபொறை மண்
மலைத்தொடர் மண்டலம்
நீலகிரி, கொடைக்கானல் (திண்டுக்கல்) செம்பொறை மண்
- ப.கோபாலகிருஷ்ணன்
