தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மடி சைக்கிள்!

மடி சைக்கிள்!

மடி சைக்கிள்!


PUBLISHED ON : ஜன 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மடிக்கும் கணினி, மடிக்கும் தொலைக்காட்சி வரிசையில் ஒரு புதிய சேர்க்கை. மடிக்கக்கூடிய மிதிவண்டி (Folding Cycle)! இந்த மிதிவண்டியை மடித்து, கையோடு தூக்கிப் போகலாம்.

இது மின் சக்தியால் இயங்கக் கூடிய மிதிவண்டி (Electric Cycle - எலக்ட்ரிக் சைக்கிள்).

ஆகாய விமானங்கள் தயாரிக்கப் பயன்படும் எடை குறைவான அலுமினியத்தால் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 கிலோ எடையுள்ள இதற்கு, 'ஜி ஃப்ளைபைக்' (Gi-FlyBike) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் விசேஷமான பல வசதிகள் உண்டு.

1 நாம் போகும் வழியைத் தெரிந்துகொள்வதற்காக குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (Global Positioning System - GPS) இருக்கிறது.

2சேமித்து வைக்கப்பட்ட மின் ஆற்றல் தவிர, சூரிய மின் சக்தியையும் (Solar - சோலார்), ஓடுவதால் கிடைக்கும் இயக்க ஆற்றலையும் மின் சக்தியாக மாற்றிக்கொள்ளும்.

3 சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி ஸ்பீடோமீட்டர் (Speedometer) திரை ஒளிரும். அலைபேசிக்கு (Mobile Phone) சார்ஜ் (Charge) ஏற்றிக்கொள்ளலாம். பங்ச்சர் (Puncture) ஆகாத டயர்களும் (Tyre) இருக்கின்றன.

4 குறைந்த எடை உள்ளதால், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓட்ட முடியும்.

5 நின்ற சில நிமிடங்களில் தானாகவே பூட்டிக்கொள்ளும். அடடா, என்ன ஒரு பாதுகாப்பு உணர்ச்சி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us