PUBLISHED ON : டிச 16, 2019

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.
1. புதிதாக உருவாகவுள்ள நாடு எது?
அ) உக்ரைன்
ஆ) திபெத்
இ) போகைன்வில்
ஈ) ருவாண்டா
2. ரிசாட் 2 பிஆர்1 செயற்கைக்கோள் எதற்கு உபயோகமானது?
அ) விவசாயம்
ஆ) வனத்துறை
இ) பேரிடர் மேலாண்மை
ஈ) இவை அனைத்துக்கும்
3. இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான சட்டதிருத்தம் எது?
அ) மோட்டார் வாகனச் சட்டம்
ஆ) காஷ்மீர் அந்தஸ்து ரத்து
இ) முத்தலாக் தடைச் சட்டம்
ஈ) குடியுரிமை திருத்த மசோதா
4. கோல்கட்டாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி என்பவர், சமீபத்தில் எந்த விருது வென்றார்?
அ) நோபல் விருது
ஆ) ஆஸ்கார் விருது
இ) யுவபுரஸ்கார் விருது
ஈ) பாரத ரத்னா
5. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களைத் துன்புறுத்துபவர்கள், கைவிடுவோருக்கு எத்தனை மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது-?
அ) 12 மாதங்கள்
ஆ) 6 மாதங்கள்
இ) 3 மாதங்கள்
ஈ) 18 மாதங்கள்
6. இஸ்ரோ செலுத்திய 50வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் பெயர் என்ன?
அ) பி.எஸ்.எல்.வி. 48
ஆ) பி.எஸ்.எல்.வி. 49
இ) பி.எஸ்.எல்.வி. 50
ஈ) பி.எஸ்.எல்.வி. 51
7. அம்மை நோய்க்குத் தடுப்பூசி போடாத குழந்தைகள் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?
அ) இரண்டாவது
ஆ) மூன்றாவது
இ) எட்டாவது
ஈ) பத்தாவது
8. தெற்காசியா 13வது விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த கலைவாணி எதில் தங்கம் வென்றார்?
அ) வில் வித்தை
ஆ) அம்பு எறிதல்
இ) துப்பாக்கி சுடுதல்
ஈ) குத்துச்சண்டை
9. தமிழகத்தில் சராசரி மின்தேவையின் அளவு எவ்வளவு?
அ) 14,000 மெகாவாட்
ஆ) 5,000 மெகாவாட்
இ) 8,000 மெகாவாட்
ஈ) 9,000 மெகாவாட்
10. தமிழக அரசு, சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கான குத்தகை காலத்தை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எத்தனை ஆண்டுகள் உயர்த்தியுள்ளது?
அ) 18 ஆண்டுகள்
ஆ) 19 ஆண்டுகள்
இ) 20 ஆண்டுகள்
ஈ) 21 ஆண்டுகள்
விடை: 1.இ, 2.ஈ, 3.ஈ, 4.அ, 5.ஆ, 6.அ,7.அ, 8.ஈ, 9. அ, 10. ஈ
