தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்த வாரம்

இந்த வாரம்

இந்த வாரம்


PUBLISHED ON : டிச 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாவ் ஜூமுர் விழா!

டிச. 20-22


மேற்கு வங்கத்தின் புருலியாவிலுள்ள பல்ராம்பூர் கிராமத்தில் நடைபெறும் நாட்டுப்புறக் கலைவிழா. அறக்கருத்துகளை வலியுறுத்தி, பல வண்ண முகமூடிகளை அணிந்து நடனக்கலைஞர்கள் ஆடுவது இதன் முக்கிய அம்சம். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

டஸ்ட்கர் பனிக்கால திருவிழா

டிச. 12-23


இந்தியாவின் தலைநகரான டில்லியின் தெற்குப் பகுதியில் உள்ள சத்தர்பூர், கிஷாண் ஹாத், அந்தேரியாமோத் ஆகிய இடங்களில் நடைபெறும் விழா. கைவினைப் பொருட்கள், கலாசாரம் போற்றும் உடைகள், நடனம், கிறிஸ்துமஸ் உணவுகள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். டில்லி அரசின் சுற்றுலாத்துறை இந்த விழாவினை ஒருங்கிணைத்து நடத்துகிறது.

செரன்டிபிட்டி கலைத் திருவிழா

டிச. 15-22


கோவாவின் பஞ்சிம் நகரில் எட்டு நாட்கள் நடைபெறும் கலைவிழா. பல்வேறு தலைப்புகளில் ஓவியர்களின் சுவர் ஓவியங்கள், நாடகம், இசை, நடனம், கட்டுமானம், கண்காட்சி என, நிகழ்ச்சிகள் வண்ணமயமாக உற்சாகத்துடன் நடைபெறும். இத்திருவிழாவின் நோக்கம், கலைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.

டோஷாலி கைவினைப் பொருட்கள் விழா!

டிச. 15-27


ஒடிஷா மாநிலத்தின் புவனேஷ்வர் நகரில் பதினான்காவது முறையாக நடைபெறும் மிகப்பெரும் கைவினைப் பொருட்கள் விழா. 130 நெசவாளர்கள், 150 கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். மாநில அரசின் கைத்தறித்துறை நடத்தும் விழாவில், 350க்கும் மேற்பட்ட அரங்குகள் அணிவகுக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us