PUBLISHED ON : ஜன 06, 2020

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.
1. புத்தாண்டு தினத்தன்று உலகிலேயே எந்த நாட்டில் அதிக குழந்தைகள் பிறந்தனர்? எண்ணிக்கை?
அ. இந்தியா, 67 ஆயிரத்து 385 குழந்தைகள்
ஆ. சீனா, 78 ஆயிரத்து 795 குழந்தைகள்
இ. அமெரிக்கா, 54 ஆயிரத்து 794 குழந்தைகள்
ஈ. இந்தோனேஷியா, 38 ஆயிரத்து 881 குழந்தைகள்
2. ______ கிரகத்தில், ரோபோ மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது?
அ. சனி கிரகம்
ஆ. புதன் கிரகம்
இ. வியாழன் கிரகம்
ஈ. செவ்வாய் கிரகம்
3. புத்தாண்டு தினத்தையொட்டி, வாட்ஸ்அப்பில் எத்தனை தகவல்கள் பரிமாறி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது-?
அ. 4 ஆயிரம் கோடி
ஆ. 12 ஆயிரம் கோடி
இ. 10 ஆயிரம் கோடி
ஈ. 7.9 ஆயிரம் கோடி
4. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்.ஐ.ஐ.ஆர்- - RIIR ) இந்தியாவில் எங்கு உள்ளது?
அ. வாரணாசி
ஆ. பெங்களூரு
இ. கோயம்புத்தூர்
ஈ. ஐதராபாத்
5. இந்தியாவில் சமீபத்தில் தலைமை இராணுவ தளபதியாகப் பொறுப்பேற்றவர் யார்?
அ. பிபின் ராவத்
ஆ. ஆர்.ஆர். பாண்டே
இ. மனோஜ் முகுந்த் நராவனே
ஈ. தினேஷ்- ஜோன்ஸ்டன்
6. 2019ஆம் ஆண்டிற்கான திருப்பதி ஸ்ரீவெங்கடாசலபதி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு?
அ. 1,161 கோடி
ஆ. 620 கோடி
இ. 870 கோடி
ஈ. 2,134 கோடி
7. சென்னை விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதிநவீன சி.டி.எக்ஸ். வகையிலான 'ஸ்கேனர்' இயந்திரம் ஒரு மணிநேரத்தில் எத்தனை உடைமைகளை சோதனை செய்யும்?
அ. 1800
ஆ. 850
இ. 100
ஈ. 1000
8. உலகிலேயே சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடும் மக்கள் கொண்ட நாடு எது?
அ. இந்தியா, நாளொன்றுக்கு சராசரியாக 3 மணி நேரம் 12 நிமிடங்கள்
ஆ. பிலிப்பைன்ஸ், நாளொன்றுக்கு சராசரியாக 4 மணிநேரம் 11 நிமிடங்கள்
இ. சீனா, நாளொன்றுக்கு சராசரியாக 5 மணிநேரம் 21 நிமிடங்கள்
ஈ. அமெரிக்கா, நாளொன்றுக்கு சராசரியாக 3 மணிநேரம் 41 நிமிடங்கள்
9. சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அரசிடம் முறையாகப் பதிவு செய்வது கட்டாயம். அதற்குரிய காலஅவகாசம் எவ்வளவு வழங்கப்பட்டுளளது?
1. ஏப்ரல் 15, 2020க்குள்
2. மார்ச் 15, 2020க்குள்
3. பிப்ரவரி15, 2020க்குள்
4. ஜனவரி15, 2020க்குள்
10.அமெரிக்க தேசிய அறிவியல் மைய தலைவராக, எந்த அமெரிக்க இந்தியர் நியமனம் செய்யப்பட்டார்?
அ. ஜே. தேவராஜ் பாலசிங்கம்
ஆ. முத்தையா சீனிவாசன்
இ. ராம்ஸ் நரேந்தர்
ஈ. சேதுராமன் பஞ்சநாதன்
விடைகள்: 1.அ 2.ஈ 3.இ 4.அ 5.இ 6.அ 7.அ 8.ஆ 9.ஈ 10.ஈ
