PUBLISHED ON : ஜன 06, 2020

உலக பட்டத் திருவிழா ஜன.7 - 14
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில், சபர்மதி ஆற்றின் அருகே நடைபெறும் பிரமாண்ட பட்டத் திருவிழா. வாழ்க்கையைப் போற்றும் விதமாக சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அழகான பட்டங்களை மக்கள் பறக்கவிடுகிறார்கள். பட்டம் தயாரிப்பு, அலங்கரிப்பு ஆகியவற்றுக்கான போட்டிகளையும் நடத்துகிறார்கள்.
மயிலாப்பூர் திருவிழா ஜன.9 - 12
சென்னை மயிலாப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கோலப் போட்டி இது. கபாலீஸ்வரர் கோவில் மற்றும் நாகேஸ்வர ராவ் பூங்காவிலும் இப்போட்டி நடத்தப்படுகிறது. நான்கு நாட்கள் நடத்தப்படும் விழாவில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். 30 நிகழ்வுகளாக நடைபெறும் விழா இது.
சன்ஸ்ப்லாஸ் ஜன.10 - 12
ரகே இசை உங்களுக்குப் பிடிக்குமா? இது உங்களைப் போன்ற இசை ரசிகர்களுக்கான விழாதான். வடக்கு கோவா பகுதியிலுள்ள மன்ட்ரெம் கடற்கரை அருகே உள்ள ரிவா ரிசார்ட்டில் சன்ஸ்ப்லாஸ் விழா நடைபெறுகிறது. மூன்று மேடைகளை அமைத்து ரகே வகை இசைவிருந்து படைக்கிறார்கள்.
மக் மேளா ஜன 10 - பிப்.21
உத்தரப் பிரதேசத்தின் பிரக்யா நகரில் நடைபெறும் விழா. கும்பமேளா நடைபெறும் இடத்திலேயே நடைபெறும் இந்த விழாவில், இந்துக்கள் நதியில் நீராடி தம் பாவத்தைத் தீர்த்துக்கொள்கின்றனர். கும்பமேளாவுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வரும் விழா என்று பக்தர்கள் மக் மேளாவைக் குறிப்பிடுகின்றனர்
