தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அறிவை வளர்த்துக் கொள்வோம்!

அறிவை வளர்த்துக் கொள்வோம்!

அறிவை வளர்த்துக் கொள்வோம்!


PUBLISHED ON : அக் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கையின் ஆதாரம் கல்வி. ஆனால், அதனால் பலன் இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ள நிலையில், கல்வி என்பது அறிவுக்காகவா? வேலைக்காகவா? என்ற தலைப்பில் மதுரை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (KRS) மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். கல்வி கற்பது எதற்காக என்பது குறித்து, அவர்களது கருத்துகளைத் தெரிந்துகொள்வோம்.

மா.காயத்ரி, 8ஆம் வகுப்பு

ஒருத்தருக்கு நல்ல வேலை கிடைக்குதுன்னா அது அவங்களோட படிப்பு, அறிவு இதுல உள்ள தகுதியை வெச்சுத்தான். இதுலயிருந்தே, கல்வி அறிவுக்கானதுன்னு புரிஞ்சுக்கலாம். வெறும் மதிப்பெண்ணை மட்டும் வெச்சு வேலையில சேர்க்கறதில்ல. படிச்ச படிப்பு மூலமாக என்ன அறிவை வளர்த்துகிட்டாங்க அப்படின்னு பார்த்துத்தான் வேலை தர்றாங்க.

சி.காவியலட்சுமி, 10ஆம் வகுப்பு

கல்வி அறிவுக்காகத்தான்னு சொல்றோம். ஆனா, கல்வி இன்னைக்கு மதிப்பெண்ணைத் தேடி ஓடற பயணமா ஆகிடுச்சு. நிறைய மதிப்பெண் எடுக்கணும். பெரிய காலேஜ்ல சேரணும். அங்கேயிருந்து பெரிய வேலையில சேர்ந்துடணும். இது தான் சமூகத்துல எல்லோரோட விருப்பமா இருக்கு. இது ஒரு வகை நிர்ப்பந்தம்தான். படிக்கறது அறிவை வளர்த்துக்கறதுக்காக மட்டுமேன்னு மாணவர்கள் புரிஞ்சுக்கணும்.

பா.சஹானா, 9ஆம் வகுப்பு

அறிவை வளர்த்துக்க நிறைய வழி இருக்கு. அதுல முக்கியமானது கல்வி. கல்வி அறிவோடு, அனுபவ அறிவை சேர்த்துப் பயன்படுத்தினா நல்ல வேலை கிடைக்கும். நமக்கு முக்கியமானது கல்வி அறிவுதான். அது இல்லாம வாழ்க்கையில முன்னேற முடியாது. எதிர்காலத்தைத் திட்டமிட்டு, வேலைக்கான படிப்பைப் படிச்சாலும், படிக்கும்போது அறிவை வளர்த்துக்கறதை நோக்கமா வெச்சுக்கணும்.

டே.ரிஷிகுமார், 10ஆம் வகுப்பு

படிக்கும்போது அறிவை வளர்த்துக்கறோம்கிறதுதான் உண்மை. ஆனா, இன்னைக்குச் சூழல்ல எதிர்காலத்துல என்ன வேலைக்குப் போலாம்னு முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கு. அதனால அது சார்ந்து படிக்கத் தேவையிருக்கு. அறிவுக்காகப் படிச்சாலும், வேலையை நோக்கித்தான் நாம நகர வேண்டியிருக்கு. எதிர்காலத்தைத் திட்டமிடணும்னா வேலைக்காகவே படிக்க வேண்டியிருக்கு.

இ.சக்திவேல், 12ஆம் வகுப்பு

அதிகமா மதிப்பெண் வாங்கினாலும் சில சமயம் மதிப்பெண் குறைஞ்சிடுச்சுன்னா, இப்படி வாங்கியிருக்கியே, போட்டிமயமான உலகத்துல என்ன பண்ணப்போறேன்னு வீட்ல கேக்கறாங்க. அதனால, வேலைக்காகவே படிக்க வெக்கற சூழல் இன்னைக்கு உருவாகிடுச்சு. அறிவுக்காகத்தான் கல்வின்ற தெளிவான சிந்தனை இருந்தா, எதிர்காலத்துல சிறந்த வேலைக்குப் போகமுடியும்.

பா.ல.அருணாச்சலம், 10ஆம் வகுப்பு

அறிவை வளர்க்க படிப்பால மட்டுமே முடியும். கல்வி கற்கும்போது அதை மட்டுமே மனசுல வெச்சுப் படிக்கணும். உழைச்சுப் பணம் சம்பாதிக்க என்ன வேலை வேணும்னாலும் தேடிக்கலாம். பெற்றோர்களும், சமூகமும் ஒரு நல்ல வேலையில சேரணும் என்ற எண்ணத்தோடயே படிப்பை அணுகறாங்க. அதனால, அவங்க கல்வியை ஒரு வேலைக்கான கருவியாவே பார்க்கறாங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us