PUBLISHED ON : ஜூன் 11, 2018

கவிமணி, கதைப் பாடல்கள் சொல்வதில் வல்லவர். அதென்ன கதைப் பாடல்? பாடல் வடிவில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதையில் ஒரு நீதி இருக்கும். பாட்டி, பானை, சுண்டெலியை வைத்து ஒரு நீதிப் பாடலை புனைந்துள்ளார் கவிமணி. அந்தப் பாடலின் கதையை இங்கே கொடுத்துள்ளோம். ஆனால், ஓரிரு வார்த்தைகளை மட்டும் விட்டு விட்டோம். அது என்ன வார்த்தை? வட்டத்துக்குள் இருக்கும் வார்த்தைகளை எடுத்து கதையை முழுமையாக்குங்கள்.
பாட்டி வீட்டில் பழைய பானை இருந்தது. அதில் சிறிய ........... இருந்தது. இதைச் சுண்டெலி ஒன்று ........... விட்டது. அது பானைக்குள் இருக்கிற .......... மணிகளைத் தின்ன உள்ளே புகுந்தது. நெல்மணிகளைத் தின்ற எலியின் உடல் ........... விட்டது. வெளியே வருவதற்கோ ஓட்டை சிறியதாக இருந்தது. பாட்டி ஒரு நாள் ........... திறந்தார். எகிறிக் ........... சுண்டெலி. இதைப் பாட்டியின் காலடியில் இருந்த ........... பார்த்து விட்டது. ஓடிப்போய் அதனைக் ......... கொன்றது. தீய வழியில் சென்றால் எப்போதும் ........... விளையும். நல் வழியில் சென்றால் ........... கிட்டும்.
