உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
வானம்வரை சுற்றுதிந்த ராட்டினம் - நம்
வயிற்றுக்குள்ளே நடக்குதொரு நாட்டியம்
கீழிருந்து கடைகள் எல்லாம் தெரிந்தது - பெட்டி
மேலே போக ஊர் முழுக்கத் தெரியுது
சிலுவை வைத்த ஏசு கோயில் பக்கமாய் - ராமர்
கோபுரமும் மசூதியும் நிற்குது
பள்ளிக்கூட சுற்றுச்சுவர் ஓரமாய் - ஒரு
தோல்வியுற்றோர் பயிற்சிக்கூடம் தெரியுது
நாயைத் துரத்திட்டு ஒருத்தன் ஓடுறான் - தாத்தா
ரோட்டைக் கடக்க வேறொருத்தன் உதவுறான்
கீழிருந்தால் கடையை மட்டும் பார்க்கலாம் - நாம்
மேலே போனால் நிறைய நிறைய பார்க்கலாம்
வானம்வரை சுற்றுகின்ற ராட்டினம் - நம்
மனசுக்குள்ளே நடத்தியது நாடகம்
- ரமேச்சு
