தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிரியை உயர்வு செய்வோம்: பாம்புப் பழம்!

உயிரியை உயர்வு செய்வோம்: பாம்புப் பழம்!

உயிரியை உயர்வு செய்வோம்: பாம்புப் பழம்!


PUBLISHED ON : ஆக 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தோனேசிய நாட்டைப் பூர்விகமாகக் கொண்டது பாம்புப் பழம். இந்தப் பழத்தின் தோல் பார்ப்பதற்குப் பாம்பின் சட்டைபோல் இருக்கும் அதனால், இப்பெயர் பெற்றது. இந்தோனேசியாவில் இது, சாலக் (Salak) என்று அழைக்கப்படுகிறது. இந்த மரம் முட்கள் நிறைந்தது என்பதால், பழங்களைப் பறிப்பதற்குத் தனித்திறமை வேண்டும்.

இந்தப் பழத்தின் கூர்மையான ஒரு முனையில் இருந்து தோலைப் பிரித்தால், உள்ளே வெளிர் மஞ்சள் நிறப் பழம் இருக்கும். இது மூன்று பிரிவாகப் பார்ப்பதற்குப் பெரிய அளவுடைய பூண்டுளின் பற்கள்போல இருக்கும். இதன் சுவை, லேசான கசப்புடன், அன்னாசிப்பழம் அல்லது பலாப்பழம் போல இருக்கும். இதைப் பச்சையாகச் சாப்பிடலாம் அல்லது சாறாகவும், மிட்டாய்களாகவும் செய்து சாப்பிடலாம். மூன்று பற்களைச் சுற்றி லேசான மேல் தோல் இருக்கும். அதன் சுவை நன்றாக இருக்காது என்பதால், அதை நீக்கிவிட்டு உண்பார்கள். இந்தப் பழங்களை அளவுக்கு அதிகமாக உண்டால் மலச்சிக்கல் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us