sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சொல்லறிவோம்: நாற்றம்

சொல்லறிவோம்: நாற்றம்

சொல்லறிவோம்: நாற்றம்


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இந்தச் சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தக்காலத்தில் நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.

'நாற்ற மிலாத மலரி னழகின்னா

தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா '

கபிலர் எழுதிய, இன்னா நாற்பது பாடலில் வரும் இரண்டு வரிகள் இவை.

மணமில்லாத பூவின் அழகானது துன்பமாகும். (இன்னா என்பது துன்பம்)

மனத் தெளிவு இல்லாதவன், ஒரு செயலை செய்யத்துணிவது துன்பமாகும், என்பது இதன் பொருள்.

மணம் என்பதை நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் கபிலர்.

'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு'

என்ற குறளிலும் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us