PUBLISHED ON : ஜூலை 31, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2010ம் ஆண்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் திறந்தவெளியில் மலம் கழிப்பதும், கழிப்பறையை உபயோகித்தபின் கைகளைச் சரியாகக் கழுவாமல் இருப்பதும்தான். ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், நாட்டின் பல பகுதிகளிலும் புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றைச் சரியான முறையில் உபயோகிக்க, குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரி என்று களத்தில் குதித்துள்ளது பரேஷ்குமாரின் டிவ்இன்சைட் (DevInsights) நிறுவனம். கழிப்பறையை சரியாக உபயோகிப்பது பற்றிய பாடல்களை உத்திரப்பிரதேச பள்ளிக் குழந்தைகளிடம் ஒலிக்க வைத்ததன் மூலம், அவர்களின் சுகாதாரம் மேம்பட்டுள்ளது. நாடு முழுவதுமே இவ்வியக்கத்தை கொண்டுசெல்ல முடியுமா என்று யோசித்து வருகின்றனர். இவ்வியக்கத்திற்கு எம்4டி என்று பெயரிட்டுள்ளனர்.