தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடந்த வார உலகம் - நான்கில் ஒன்று பார்க்கலாம்!

கடந்த வார உலகம் - நான்கில் ஒன்று பார்க்கலாம்!

கடந்த வார உலகம் - நான்கில் ஒன்று பார்க்கலாம்!


PUBLISHED ON : டிச 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே விடையைப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி சரியான விடையைக் கண்டுபிடியுங்கள்.

1. வெளிநாடுகளுக்கு அதிகம் புலம்பெயரும் மக்களைக் கொண்ட நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) மெக்சிக்கோ

ஈ) பிரேசில்

2. சமீபத்தில், இராணுவத் திட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு எவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது?

அ) ரூ.25,000 கோடி

ஆ) ரூ.3,000 கோடி

இ) ரூ.30,000 கோடி

ஈ) ரூ.22,000 கோடி

3. வெளிநாடுகளில் வேலை செய்து, அதிக அளவிலான பணத்தை தாய்நாட்டிற்கு அனுப்புவோரில் முதலிடத்தில் உள்ளவர்கள் எந்த நாட்டினர்?

அ) லண்டன்

ஆ) பிரான்ஸ்

இ) சீனா

ஈ) இந்தியா

4. மத்திய அரசு அறிவித்துள்ள ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேர்வைத் தமிழிலும் எழுதலாம் என தெரிவித்துள்ளது எப்போது அமலுக்கு வருகிறது?

அ) அப்படி அறிவிக்கவில்லை

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

5. இந்திய விமானப்படைக்கு ----------------- ரக போர் விமானங்களைக் குறைந்த விலையில் தயாரித்து வழங்கத் தயாராக இருப்பதாக ஸ்வீடன் தெரிவித்துள்ளது?

அ) 114 க்ரிபன்

ஆ) லாக்ஹீட் எஃப்-16

இ) ரஃபேல் போர் விமானம்

ஈ) மிக் -29

6. மகாராஷ்டிரத்தின் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றவர் யார்?

அ) தேவேந்திர பட்னாவிஸ்

ஆ) அஜித் பவார்

இ) சரத் பவார்

ஈ) உத்தவ் தாக்கரே

7. வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறாமல் இருப்பதற்காக அச்சு அசலாக போக்குவரத்து காவலர்கள்போல தோற்றமளிக்கும் பொம்மைகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) திருவனந்தபுரம்

ஆ) கோவா

இ) பெங்களூரு

ஈ) குருகிராம்

8. பூமியியைக் கண்காணிக்காக பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் சமீபத்தில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் எது?

அ) ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.- 1எச்

ஆ) ஜிசாட்- 7ஏ

இ) கார்ட்டோசாட் - 3

ஈ) கலாம் சாட்

9. தமிழகத்தில் எங்கு ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?

அ) தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம்

ஆ) திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூர்

இ) திருவள்ளுர் மாவட்டம், ஆவடி

ஈ) திருவாரூர் மாவட்டம், நன்னிலம்

10. டென்னிஸ் வீராங்கனை சானியா மீண்டும் எந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்?

அ) ஆஸ்திரேலியா- ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி

ஆ) ஜெர்மனி -ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி

இ) அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி

ஈ) ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி

விடை-1) ஆ 2) ஈ 3) ஈ 4) இ 5) அ 6) ஈ 7) இ 8) இ 9) அ 10)அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us