தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தாவரங்களோடு உரையாடுவோம்!

தாவரங்களோடு உரையாடுவோம்!

தாவரங்களோடு உரையாடுவோம்!


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நுரையீரல்கள் இல்லாவிட்டாலும் தாவரங்கள் சுவாசிக்கின்றன. வயிறு இல்லை என்றாலும் உணவைச் செரிக்கின்றன. தசைகள் இல்லாவிட்டாலும் அவை பல செயல்களை மேற்கொள்கின்றன. தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் அவை உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன. சில தாவரங்களைத் தொட்டாலே அவற்றின் வளர்ச்சி பாதிப்படைகிறது. அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை உட்கொள்ளும்போது தாவரங்களும் மற்ற உயிரினங்களைப் போன்றே இறந்து விடுகின்றன. தாவரங்களின் செயற்பாடுகள், அவற்றின் வளர்ச்சி முறை போன்றவை அவை சுற்றுச் சூழலில் இருந்து பெறும் ஆற்றல் காரணமாகவே நிகழ்கின்றன. இந்த ஆற்றலை அவை தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன.

வீடு, பள்ளியில் உள்ள செடிகளின் கிளைகளை உடைக்கவோ, மலர்களைப் பறிக்கவோ செய்யும்முன் அவற்றிற்கும் உயிர் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தோட்டங்களில் உள்ள செடிகளைப் பார்க்கிறபோது அவற்றோடு பேசி உங்கள் நண்பனாக்கிக் கொள்ளுங்கள்!

தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றவைதான் என்பதை இந்திய அறிவியல் அறிஞர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் தனது ஆய்வுகளின் மூலம் நிரூபணம் செய்தார். தாவர உயிரினங்கள் பற்றிய அவரது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் புத்தகமாக எழுதினார். அவர் எழுதிய 'உயிருள்ள-உயிரற்ற வாழ்வினங்களின் எதிர்வினை' (The Reaction of Living and Non-living) என்ற நூல் 1902ஆம் ஆண்டு வெளியானது. டாக்டர் போஸ் தாவரங்கள் சுருங்குவதைப் பதிவு செய்ய 'ஒளியிழை நாடிப்பதிவி' (Optical Pulse Recorder) என்ற கருவியைக் கண்டுபிடித்தார். இந்தக் கருவியைப் பயன்படுத்தி தாவரங்கள் மின் அலைகளை உற்பத்தி செய்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

'கிரெஸ்கோகிராப்' (Crescograph) என்ற கருவியின் மூலமாக தாவரங்களின் இயக்கங்களை பல்லாயிரம் மடங்கு உருப்பெருக்கத்தில் காணலாம். தாவரங்களில் ஒரு நிமிடத்திற்குள் நிகழும் மாற்றங்களையும் இக்கருவி மூலம் பதிவு செய்ய முடியும். இந்தக் கருவியையும் டாக்டர் போஸ் வடிவமைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us