sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியை கேளுங்க

/

வெங்கியை கேளுங்க

வெங்கியை கேளுங்க

வெங்கியை கேளுங்க


PUBLISHED ON : ஜன 02, 2017

Google News

PUBLISHED ON : ஜன 02, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) படிப்பு தினசரி வாழ்க்கைக்கு எவ்வாறு உதவுகிறது? எதிர் காலத்தில் இதன் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?

அப்துர் ராசிக், 11-ம் வகுப்பு, அரவிந்தர் மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை
.

இன்று இன்சுலின் போன்ற பல மருந்துகள், உயிரி தொழில்நுட்பம் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. தினமும் நாம் பயன்படுத்தும் துணி சலவை சோப் முதல், பல வேதிப் பொருட்களின் தயாரிப்பில் உயிரி தொழில்நுட்ப பயன்பாடு உள்ளது.

ஒருகாலத்தில், இரும்பு போன்ற உலோகம் கொண்டு இயந்திரங்கள் தயாரிப்பதுதான் தொழில் புரட்சிக்கு வித்திட்டது; பின்னர் வேதியியல் துறை, இரண்டாம் தொழில் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது, உயிரி தொழில்நுட்பம் கொண்டு ஆற்றல் உருவாக்குவது முதல், பல பணிகளை செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் காலத்தில், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பாடு அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும், தொழிற் புரட்சியின் விளைவாக, சூழல் மாசு ஏற்பட்டது போல, உயிரி தொழில்நுட்பம் பல விரும்பத்தகாத பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவனத்துடன் செயல்பட்டால், மனித முன்னேற்றம் சாத்தியம்.

இரு அணுக்கள் பிணையும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு அணுவிலும் எதிர்மறை துகள்களால் சூழப்பட்டுள்ள எலக்ட்ரான்களும் இருக்கின்றன. இதை வைத்து அணுக்கள் பிணைவை தடுக்க முடியாதா?

டி.கே. ஹரிஷ்குமார், 12ம் வகுப்பு, மதுரா கல்லூரி உயர்நிலைப் பள்ளி, மதுரை.


சோடியம், குளோரின் பிணைந்து, சோடியம் குளோரைடு (Nacl) உருவாகும்போது, சோடியத்தின் ஒரு எலக்ட்ரான் குளோரினுள் சென்று விடுகிறது. எலக்ட்ரானை இழந்த சோடியம், நேர் மின் அயனியாக (Na+) மாறிவிடும். அதே போல, கூடுதல் எலக்ட்ரானை ஏற்றுக் கொண்ட குளோரின் எதிர்மின் அயனியாக (Cl-) மாறிவிடும். இப்போது, நேர் எதிர் மின்னேற்றம் கொண்ட இரு அணுக்கள் இடையே, அயனிப் பிணைப்பு நடந்து சோடியம் குளோரைடு (உப்பு) உருவாகிவிடும். இது ஒருமுறை.

எட்டு எலக்ட்ரான் கொள்கை எனப்படும் வேதியியல் விதியின்படி, இரண்டு எலக்ட்ரான் ஜோடி இருந்தால், ஹைட்ரஜன் அணு முழுமை அடையும். ஆனால்,ஹைட்ரஜன் அணுவில் ஒரே ஒரு எலக்ட்ரான்தான் உள்ளது.

எனவே, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஜோடியாக மாறும். அதன்பிறகு, 'கொஞ்ச நேரம் நீ வைத்துக் கொள், கொஞ்ச நேரம் நான் வைத்துக் கொள்கிறேன்' என இரண்டு எலக்ட்ரானையும், இரண்டு அணுக்களும் பங்கீடு செய்து பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும்.

உலோகங்களில் பல வெளி எலக்ட்ரான்கள் சுதந்திரமாகத் திரியும். எலக்ட்ரானை இழந்த அணு நேர் மின் அயனியாக இருக்கும். சுதந்திரமாக திரியும்

எலக்ட்ரான்களில், இந்த நேர் மின் அயனிகள் கூடு போன்ற அமைப்பில் அமையும். இதுவே உலோகப் பிணைப்பு. இதன் தொடர்ச்சியாகவே உலோகங்கள் கட்டிகட்டியாக இருக்கின்றன. இவ்வாறுதான் எலக்ட்ரான்களின் மின்விலகல் தன்மையை சரிசெய்து, அணுக்களுக்கு இடையே பிணைப்புகள் ஏற்படுகின்றன.

ராமேஸ்வரமும் தூத்துக்குடியும் அருகருகே இருக்கும் கடல்பரப்புகள். ஆனால், கடல் நீரின் உப்பு அளவில் வேறுபாடு இருக்கிறதே. இயற்கையில் என்ன மாற்றம் நிகழ்கிறது?

வி. சாந்தகோபாலன், மதுரை.


ஒரு குறிப்பிட்ட பகுதியில் வந்து விழும் நதிகளின் நீரளவு மற்றும் அங்கே பொழியும் மழையளவைப் பொறுத்து, கடலின் உப்புத் தன்மை அமையும்.

வங்காள விரிகுடாவில் கங்கை போன்ற பெரும் நதிகள் நன்னீரால் கலக்கின்றன; பருவமழை அதிக அளவில் வங்காள விரிகுடாவில் பொழிகிறது.

மேலும் வங்காள விரிகுடாவின் மேற்பரப்பு வெப்பம் 220C முதல் 310C வரைதான் அமைகிறது. இது அரபிக் கடலைவிட 1 முதல் 20C வரை குறைவு. இதன் காரணமாக, உப்பை கடலிலேயே விட்டுவிட்டு, அரபிக் கடல் நீர் கூடுதலாக ஆவியாகி விடுகிறது. இவை எல்லாம் சேர்ந்து, தூத்துக்குடி கடல் இருக்கும் அரபிக் கடலில் மேலும் கூடுதல் உப்பு உள்ளது.

எந்தப் பொருளை எரித்தாலும், அதிலிருந்து சாம்பல் ஒரே நிறத்தில்தான் கிடைக்கிறது. வேறு நிறத்தில் ஏன் கிடைப்பதில்லை?

ஆர்.எஸ். பிந்தியா, மின்னஞ்சல்.


பொதுவாகவே, நாம் எரிக்கும் பொருட்கள் எல்லாம் கரிமப் பொருட்கள். இதில் உள்ள கார்பன்தான், கருப்பான சாம்பலாகக் கிடைக்கிறது. உதாரணமாக, காகிதம் மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது காகித தாவரப் பொருள். காகிதம் எரியும்போது அதிலிருக்கும் கரிமப் பொருளான கார்பன்தான் சாம்பலாகிறது.






      Dinamalar
      Follow us