sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியை கேளுங்க!

/

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : மார் 25, 2019

Google News

PUBLISHED ON : மார் 25, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. சைக்கிள் பெடலை முன்நோக்கி மிதித்தால் முன் செல்வதுபோல், பின்நோக்கி மிதித்தால் பின் செல்வதில்லையே ஏன்?

கே.ரம்யா, 8ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா, சென்னை.


ஹைட்ரஜனைக் குப்பிகளில் அடைத்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது வெளிப்படும் புகையானது, நீராவியாக இருக்கும். ஆகவே, காற்றை மாசுபடுத்தாத பசுமை எரிபொருள் என்ற எதிர்பார்ப்பில் எளிய வழியில் ஹைட்ரஜனை உருவாக்கும் தொழில்நுட்பங்களைத் தேடி வருகின்றனர்.

தற்போது நடப்பில் உள்ள தொழில்நுட்பங்களில், மின்பகுப்பு மூலம் (electrolysis) சுமார் 4%, பெட்ரோலியம், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருட்களில் இருந்து 96% பிரித்தெடுக்கின்றனர். இவை எதுவும் பசுமைத் தொழில்நுட்பங்கள் அல்ல. ஆகவே, ஹைட்ரஜன் தயாரிக்க மாற்று முறைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் நீரை உறிஞ்சி அதில் உள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜனைப் பிரிக்கின்றன. அதிலிருந்து தனது உணவான குளூக்கோஸைத் தயாரிக்க, ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன.அதாவது வெறும் சூரிய ஒளியை வைத்து இந்த வேதி நிகழ்ச்சியைத் தாவரங்கள் நடத்துகின்றன. செயற்கை முறையில் ஒளிச்சேர்க்கையை நம்மால் செய்யமுடிந்தால், எளிதில் ஹைட்ரஜனைத் தயாரிக்கலாம். இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

2. ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க புதிய தொழில்நுட்பங்கள் உண்டா?

ஜி.வருண், கலசலிங்கம் பல்கலைக்கழகம், 2ஆம் ஆண்டு இளநிலை தொழில்நுட்பம், கிருஷ்ணன்கோவில், விருதுநகர்.


சைக்கிளின் பின் சக்கரம் மட்டுமே நாம் மிதிக்கும் பெடல் அமைப்போடு சங்கிலி (Chain) கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது. எனவே, பெடலை அழுத்துவதால் மட்டும் முன் சக்கரம் நகராது. மேலும், அந்தச் சங்கிலி நேரடியாகப் பின் சக்கர அச்சுடன் பிணைக்கப்படவில்லை. ஒருவழிப் பல்லிணை (Freewheel) என்ற அமைப்போடுதான் பிணைக்கப்பட்டுள்ளது.

அருகே உள்ள படத்தில் ஒருவழிப் பல்லிணையைப் பாருங்கள். படம் 1இல் உள்ளவாறு முன்நோக்கி சங்கிலியுடன் பல்லிணை அமைப்பு சுழலும்போது, பற்களின் இடுக்கில் சிவப்பு நிறக் கொக்கி மாட்டிக் கொள்ளும். இதன் காரணமாகப் பச்சை நிற அச்சு சுழன்று சக்கரம் சுழலும்.

படம் 2இல் உள்ளவாறு பின்நோக்கி சங்கிலியுடன் பல்லிணை அமைப்பு சுழலும்போது, சிவப்பு நிறக் கொக்கி பற்களில் மாட்டிக்கொள்ளாது நழுவிச் சென்றுவிடும். எனவே, பச்சை நிற அச்சு சுழலாமல் சக்கரம் சுழலாது. இதனால் சைக்கிள் நகராது.

3. வயதாகும்போது கண்ணும் காதும் முதலில் செயலிழப்பது ஏன்?

மு.ராகுல்கவி, 7ஆம் வகுப்பு, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.


வயதாகும்போது கண்களும், காதுகளும் முதலில் செயலிழப்பது போல தோன்றலாம். ஆனால், வயதாகும்போது உடலில் இரண்டு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

1. இயல்பான மூப்படைதல்

கால் கை முட்டித் தேய்ந்து போதல், கண் பார்வை மங்குதல், புரை விழுதல், தலை நரைத்தல், தோல் சுருங்குதல், காது மந்தமாதல், புதிய செல்கள் பிறக்காமல் உடல் வற்றிப்போதல் இவையெல்லாம் மூப்படைதலால் ஏற்படும் மாற்றங்கள்.

2. மூப்பின் காரணமாக ஏற்படும் உடல் நோய்கள்

இரத்த அழுத்தம், இரத்தக் குழாய் அடைப்பு, புற்றுநோய் போன்ற பிற நோய்கள் மூப்படைந்தவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னைகள். ஆகவே, வயதாகும்போது, பல்வேறு உறுப்பு செயலிழப்பையும் சந்திக்கிறோம்.

4. பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன? அணுக்கள் இல்லாத பகுதியை எது நிரப்பி இருக்கிறது?

பா.ஸ்ரீவிஷாக், 10ஆம் வகுப்பு, கிரைஸ்ட் உயர்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி, சென்னை.


அணுக்கள் என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் முதலிய துகள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் துகள்கள் அதற்கும் அடிப்படையான குவார்க் போன்ற துகள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அடிப்படைத் துகள்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. நியூட்ரினோ புரோட்டான் (பேரியான் வகை)

2. எலக்ட்ரான் நியூட்ரினோ (லெப்டான் வகை)

3. போட்டான் குளுவான்கள் (விசைகளைக் கடத்தும் துகள்கள்)

அதாவது, ஓரிடத்தில் அணு இல்லை என்றாலும், அங்கே எலக்ட்ரான், புரோட்டான் அல்லது குவார்க்குகள் இருக்கலாம். மேலும் E=mc2 விதிப்படி, ஆற்றல் பொருளாகவும் பொருள் ஆற்றலாகவும் மாற முடியும். எனவே, பொருளையும் ஆற்றலையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாது.

நீர் ஆவியாக, திரவமாக அல்லது பனிக்கட்டியாக இருக்க முடியும் என்பது போல, பருப்பொருள் (matter) என்பது பொருளாக அல்லது ஆற்றலாக இருக்கலாம். இதுவரை நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்தில் எங்குமே பருப்பொருள் இல்லாத இடம் என்று எதுவுமில்லை.

பிரபஞ்சம் உருவாகி இதுவரை 14 பில்லியன் ஆண்டுகளே கடந்துள்ளன. எனவே, பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மட்டுமே ஒளி நம்மை வந்து அடைய முடியும்.

ஒவ்வொரு திசையிலும் சுமார் 8.8க்குப் பிறகு இருபத்தியாறு பூஜ்ஜியங்களை இடுங்கள். அவ்வளவு மீட்டர் விட்டம் கொண்ட பந்து போன்ற பகுதிதான் பார்வைக்கு உட்பட்ட பிரபஞ்சம் (Observable universe). இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த நிறை 4.5க்குப் பிறகு 51 பூஜ்ஜியங்களை இட்டால் வரும் எண்தொகையின் கிலோ என மதிப்பீடு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us