sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/லிட்டில் மாஸ்டர்

லிட்டில் மாஸ்டர்

லிட்டில் மாஸ்டர்


PUBLISHED ON : ஜூலை 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுனில் மனோகர் கவாஸ்கர்

10.7.1949

மும்பை.

1975 ஜூன் 7. இங்கிலாந்தில் தொடங்கிய முதல் உலகக் கோப்பை கிரிக்கெட். வெங்கட்ராகவன் தலைமையில் முதல் போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது, இந்தியா. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து, 334 ரன்களைக் குவித்தது. இந்தியா 132 ரன்களை மட்டுமே எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவாஸ்கர், டெஸ்ட் போட்டிபோல விளையாடி, 174 பந்துகளில் வெறும் 36 ரன்கள் எடுத்தார். அதைப் பொறுக்க முடியாத ரசிகர்கள் மைதானத்திலேயே அவரைக் கேலி செய்தனர். அதற்குப் பிறகு அவர் தமது விளையாட்டுப் பாணியை மேம்படுத்திக் கொண்டு, சாதனை செய்தது வரலாறு.

சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த அவரது மாமா எம்.கே.மந்த்ரி மூலமாகப் பயிற்சிகள் எடுக்கத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போதே பல போட்டிகளில் கலந்துகொண்டு 'இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்' என்று பெயர் எடுத்தார்.

1971இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கி 4 போட்டிகளில் 774 ரன் குவித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடியதால், இந்திய அணியின் வெற்றியும் அவரது விளையாட்டும் உலகச் சாதனையை நோக்கி முன்னேறின.

வேகப் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிறப்பான ஆட்ட உத்திக்காகப் போற்றப்பட்டார். இந்திய வீரர்களால் வேகப்பந்துகளையும் சமாளிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி, தனது பேட்டிங் திறமையைத் தனித்துவத்துடன் வடிவமைத்துக் கொண்டார்.

34 சதங்கள் உட்பட 10,122 ரன்களுடன் 1987இல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வருகிறார். 'சன்னி டேஸ்' என்ற சுயசரிதை மற்றும் கிரிக்கெட் சம்பந்தமாகப் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

பெருமைகள்

டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் கடந்த முதல் வீரர்

100 டெஸ்டுகளை ஆடிய முதல் வீரர்

ஆண்டுக்கு 1000 ரன் என 3 முறை சாதனை

18 கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து 58 முறை பார்ட்னர்ஷிப் சதம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச்

விருதுகள்

பத்மபூஷண்

அர்ஜுனா

கர்னல் சி.கே.நாயுடு' வாழ்நாள் சாதனையாளர் விருது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us