தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூலை 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 11, 1989 - உலக மக்கள்தொகை நாள்

மக்கள் தொகை தொடர்பான பிரச்னைகள், அவசரத் தேவைகளுக்குத் தீர்வுகாண ஐ.நா.சபையால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஜூலை 12, 1854 - ஜார்ஜ் ஈஸ்ட்மேன் பிறந்த நாள்

கோடாக் கம்பெனியின் நிறுவனர். புகைப்படக்கலையை எல்லோரும் பயன்படுத்தக் காரணமான ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தார். 1900களில் 1 டாலர் விலை கேமராவை அறிமுகம் செய்தார்.

ஜூலை 12, 1904 - பாப்லோ நெருடா பிறந்த நாள்

20ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. 'பூமியின் சருமம் உலகெங்கும் ஒன்றுதான்' என்ற இவரது கவிதை பிரபலமானது.

ஜூலை 14, 1945 - ஷிவ் நாடார் பிறந்த நாள்

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான ஹெ.சி.எல். (HCL)இன் தலைமைச் செயல் அதிகாரி. 2008இல் இந்திய அரசு இவருக்கு 'பத்ம பூஷண்' விருது அளித்துக் கெளரவித்தது.

ஜூலை 15, 1876 - மறைமலை அடிகள் பிறந்த நாள்

தமிழறிஞர். தமிழ்ப் பற்றால், 'வேதாச்சலம்' என்ற பெயரை 'மறைமலை' என்று மாற்றிக் கொண்டார். இலக்கியம், மருத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

ஜூலை 15, 1903 - கு.காமராஜர் பிறந்த நாள்

முன்னாள் தமிழக முதல்வர். மாணவ, மாணவியருக்கு, இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்தினார். இந்திய அரசு இவருக்கு 1976இல் 'பாரத ரத்னா' விருது வழங்கிக் கௌரவித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us