தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உள்ளூர் மரங்களும் வெளிநாட்டு மரங்களும்!

உள்ளூர் மரங்களும் வெளிநாட்டு மரங்களும்!

உள்ளூர் மரங்களும் வெளிநாட்டு மரங்களும்!


PUBLISHED ON : டிச 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நாட்டின், 'உள்ளூர் மரங்கள்' (Indigenous trees) என்பன இயற்கையாகவே பல காலமாக அந்த நாட்டில் வளர்வனவாகும். வேறொரு நாட்டில் இருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்ட மர இனங்களை அயல் இனம் என்பார்கள் (Exotic species).

வெளிநாட்டுத் தாவரங்களை நம் நாட்டில் ஏன் வளர்த்தார்கள்?

பல காரணங்கள் இருந்தாலும், சில முக்கிய காரணங்கள்:

* ஆங்கிலேயர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக இந்தியாவில் குடியேறி, பல பணிகளையும் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட இடமாக நீலகிரி இருந்தது. அங்கே குடும்பத்தோடு தங்கிப் பல பணிகளையும் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகளுக்குத் தங்கள் சொந்த நாட்டு நினைவு அடிக்கடி வந்துவிடுமாம். எனவே, அவர்கள் நாட்டில் உள்ள பல தாவரங்களையும் இங்கே கொண்டு வந்து நட்டு வளர்த்தனர். அத்தகைய தாவரங்களில் யுலெக்ஸ் யுரோப்பியன்ஸ் (Ulex europeans) என்பதும் ஒன்று. மஞ்சள் பூக்களோடு புதர்போலக் காட்சியளிக்கும் இந்தச் செடிகள், களைகள் போலத் தற்போதும் நீலகிரியில் மண்டிக்கிடப்பதைப் பார்க்கலாம்.

* எரிபொருள் தேவையை ஈடுகட்டுவதில் பெரும் பங்காற்றுவதால் வேட்டில், யூக்கலிப்டஸ், பைனஸ் போன்ற வெளிநாட்டு மரங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை மிகவேகமாக வளரும். வேட்டில் மரப்பட்டை தோல் பதனிடப் பயன்படும். இவை குறுகிய ஆண்டுகளிலேயே பயன் தருவன. விதைகள் சேகரிப்பது எளிது. வனத்துறை மூலம் மலைப்பகுதி வனங்களில் இவை மிக அதிகமாக நடப்பட்டன.

நீலகிரி போன்ற மலைப்பகுதிகளின் உச்சியில் உள்ள சோலைவனங்களும் புல்வெளிகளும் (Shoal forest and grass lands) பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும், வெளிநாட்டு மரங்கள் வளர்பபதைக் கைவிட வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றனர். தற்போது பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, உள்ளூர் மரங்களின் நடவே அதிகம் ஊக்குவிக்கப் படுகிறது.

ஏன் உள்ளூர் மரம் வளர்ப்பு?

* வேலிக் கருவேல் (Prosopis juliflora) போன்ற வெளிநாட்டு மரங்கள் எரிபொருள் தேவையை ஈடுகட்டினாலும், நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் அசுரத்தனமானவை. ஏனைய தாவரங்கள் எதையும் வளரவிடாதவை. இந்த மர இனத்தை அப்புறப்படுத்துவதும் நம் உள்ளூர் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும்.

* உள்ளூர் மரங்கள் இங்கே உள்ள பூச்சிகளின் தாக்குதலுக்குப் பழக்கப்பட்டவை; நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.. நமது தட்பவெப்ப நிலைகளுக்குப் பழகிப்போனவை என்பதால் வறட்சியையும் தாங்கக்கூடியவை.

* உள்ளூர் மரங்கள், பல விலங்குகள், பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு வாழிடமாகவும், உணவளிப்பனவாகவும் இருக்கின்றன. அவை மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுகின்றன.

- லதானந்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us