தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாரு பாரு... பழசு பாரு...

பாரு பாரு... பழசு பாரு...

பாரு பாரு... பழசு பாரு...


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது முன்னோர் பயன்படுத்தி வந்த பல பொருட்கள் இன்று அதிகம் புழக்கத்தில் இல்லை. (புழக்கம் என்கிற வார்த்தையே புழக்கத்தில் இல்லையே சார்…) பல பொருட்கள் காணாமலும் போய்விட்டன. வாகனங்களிலும் வசிப்பிடங்களிலும் எவ்வளவோ மாற்றங்கள்! அந்தப் பொருட்கள், இடங்கள் எல்லாம் எப்படி இருந்தன என்பதை அறிமுகம் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம். 'பட்ட'த்தில் இடையிடையே வந்து உங்களைப் பழைய காலத்துக்கு அழைத்துச் செல்லும் இந்தப் பயணத்தை மாட்டு வண்டியில் அமர்ந்து தொடங்குகிறோம்!

1. நுகத்தடி: மாடுகளைப் பூட்ட பயன்படும் நீளமான தடி. இதன் இரு பக்கங்களிலும் துளைகள் இருக்கும்.

2. பூட்டாங்கயிறு: மாடுகளை இணைப்பதற்காக, நுகத்தடியில் உள்ள துளைகளில் ஒரு கயிறு மாட்டப்பட்டு இருக்கும்.

3. கட்டு: மரத்தாலான சக்கரம் உடையாமல் இருக்கவும் வலிமையாக இருக்கவும் உதவும்.

4. வட்டை: ஒரு சக்கரத்தை வடிவமைக்க வளைந்த அமைப்புகள் தேவை. ஆறு வட்டைகள் ஒரு சக்கரத்தை வடிவமைக்கும்.

5. ஆரக்கால்கள்: வட்டையையும் குடத்தையும் இணைக்கும் கால்கள். ஒரு சக்கரத்திற்கு ஆறு ஆரக்கால்கள் இருக்கும்.

6. இருசு கட்டை: வண்டியின் பாகத்தைத் தாங்கி நிற்கும். இதன் வழியேதான் அச்சு செல்லும். இந்த அச்சு வழியேதான் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

7. குடம்: ஆரக்கால்களை வட்டையுடனும் அச்சுடனும் இணைக்கும் பகுதி.

8. முளைக்குச்சி: வண்டியின் இரு பக்கங்களிலும் துளையிட்டு செங்குத்தாக நிறுத்தியிருப்பர். சுமை ஏற்றும் போது வெளியில் விழாமல் பாதுகாக்கும்.

9. கடையாணி (அ) அச்சாணி: சக்கரங்கள் அச்சை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாக்க செருகப்பட்டிருக்கும்.

10. கொழுப்பலகை: வண்டியை ஓட்டுபவர் அமர்ந்து செல்ல வண்டியின் முன் பக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு பலகை.

11. புறக்கந்து (அ) மூக்காணி: வண்டி, தரையில் ஊன்றி நிற்க உதவும் பகுதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us