sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/ஒளிரும் பச்சை

ஒளிரும் பச்சை

ஒளிரும் பச்சை


PUBLISHED ON : மார் 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரகதம் (Emerald - எமரால்ட்)

* 'பெரில்' (Beryl) வகையைச் சேர்ந்த, ஒளிரும் தன்மையுடைய ஒரு கனிமம்.

* இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம், குரோமியம் போன்ற ரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன.

* பெரில்லீயம் (Beryllium), அலுமினியம் (Aluminium), சிலிகேட் (Silicate) என்ற

மூலப் பொருட்களால் ஆனது.

* பூமியிலிருந்து வெட்டி எடுக்கும்போது, மங்கலான கல்லாகவே காணப்படும்.

* 'வனேடியம்' (Vanadium) என்ற மூலகம் மரகதத்திற்குப் பச்சை நிறம் தருகிறது.

* வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை இது கிடைக்கிறது.

* மற்ற நவரத்தினங்களுடன் ஒப்பிடும்போது, இதற்கு அடர்த்தித் தன்மை குறைவு.

* இந்தக் கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை.

* பளபளப்பு ஏற்றப்பட்டு அழகுபடுத்தும்போது, தரமானதாக ஆகிறது.

* ஆபரணப் பயன்பாட்டில் வைரத்திற்கு அடுத்ததாக அதிக விலையுயர்ந்த ரத்தினமாக மரகதம் உள்ளது. அதிர்ஷ்டக் கல்லாகவும் நம்பப்படுகிறது.

* முதல் தரமான மரகதம், கொலம்பியா நாட்டில் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கல்லில் குரோமியம் அதிகமாக உள்ளதால், தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கிறது.

* பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது என்றாலும், இவை தரத்தில் உயர்வானதாக இருப்பதில்லை.

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us