தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எங்கும் இயந்திரம்

எங்கும் இயந்திரம்

எங்கும் இயந்திரம்


PUBLISHED ON : செப் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், பெரும்பாலும் தொழிற்சாலைகளில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்படி இயந்திரங்களைக் கொண்டு தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை, 18ஆம் நூற்றாண்டின் மத்தியில், இங்கிலாந்தில் தொடங்கியது. அங்கு தொழிற்சாலை மயமான முதல் தொழில், ஆடை உற்பத்தித் தொழில்தான். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்கள், இதற்கு அடிப்படையாக இருந்தன.

இதன் பெயர் ஸ்பின்னிங் ஜென்னி. இது, பஞ்சை நூலாக நூற்று, கண்டுகளில் சுற்றப் பயன்படும் இயந்திரம். ஜேம்ஸ் ஹர்கிரீவ்ஸ் என்ற ஆங்கிலேயர், இதை 1720ல் கண்டுபிடித்தார். அந்தக் காலத்தில், ராட்டைகளைப் பயன்படுத்தியே மக்கள் நூல் நூற்றார்கள். ஒரு ராட்டையை வைத்துக்கொண்டு, ஒரு சமயத்தில் ஒரு நூற்கண்டில் மட்டுமே நூல் சுற்ற முடியும். ஆனால், ஸ்பின்னிங் ஜென்னியில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டுகளில் நூல் சுற்றலாம்.

ஸ்பின்னிங் மியூல்: ஸ்பின்னிங் ஜென்னியின் மேம்பட்ட வடிவம் இது. இதை சாமுவேல் கிராம்ப்டன் என்ற ஆங்கிலேயர் 1779ல் வடிவமைத்தார். இது ஒரே சமயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுகளில் நூலைச் சுற்றும் திறன் படைத்தது! மூவாயிரம் பேர் ஒரு நாளில் செய்யக்கூடிய வேலையை, ஒரு மியூல் இயந்திரம், ஒரு சில மணி நேரத்தில் முடித்துவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us