உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 18, 2017

அ நிறம் | அளவு
சிறுமிகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை, மத்தியப் பிரதேச அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல்கள் ஒலித்தபோதும், பல்வேறு மகளிர் அமைப்புகள் இதனை வரவேற்றுள்ளன.
போபாலில் ஒரு மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசும்போது, ''இந்தப் புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளிப்பார் என்று தான் நம்புவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்குத் தற்காப்புக்கலை பயிற்சிகளைக் கற்றுத்தர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் அறிவித்துள்ளார்.
