தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'மார்ட்டின் லூதர் கிங்' தினம் - ஐனவரி 18

'மார்ட்டின் லூதர் கிங்' தினம் - ஐனவரி 18

'மார்ட்டின் லூதர் கிங்' தினம் - ஐனவரி 18


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் 3வது திங்கள் கிழமை, மார்ட்டின் லூதர் கிங் பிறந்த நாளான ஜனவரி 15ன் நினைவாக கொண்டாடப்படுகிறது.



எனக்கொரு கனவு உண்டு:
கடந்த 1964க்கு முன், அமெரிக்காவில், கறுப்பின மக்கள், பொது இடங்களில் சாதாரணமாக புழங்க முடியாத நிலை இருந்தது. பேருந்துகள், ரயில்களில் கறுப்பின மக்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளையர்கள் படிக்கும் பள்ளிகளில் அவர்களது குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சம உரிமை மறுக்கப்பட்டது. தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. மொத்தத்தில் கறுப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

கறுப்பின மக்களுக்கு உரிமைகள் அளிக்கக்கோரி 1955ல் மார்ட்டின் லூதர் கிங் போராட்டம் தொடங்கினார். காந்தியடிகளின் அகிம்சை வழி போராட்ட முறை அவரைக் கவர்ந்தது. அதே பாணியில் தன் போராட்டங்களை அமைத்துக் கொண்டார் மார்ட்டின் லூதர் கிங். இதனால், 'கறுப்பு இன மக்களின் காந்தி' என அவர் அழைக்கப்பட்டார்.

மார்ட்டின் லூதர் கிங் வாஷிங்டனில், 1963-ம் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். அந்த அமைதிப் பேரணியில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார்.

உலகை மெய் சிலிர்க்க வைத்த அந்த உரையில்...

'எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்' என்று பேசினார்.

மார்ட்டின் லூதர் கிங் மேற்கொண்ட தொடர் அறப்போராட்டங்களால் கறுப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. கறுப்பின மக்களும், வெள்ளை இனத்தவர்களும் சமம் என்ற மனித உரிமைச் சட்டத்தை 1961ல் அமெரிக்கா நிறைவேற்றியது. வன்முறையற்ற வழியில் நிற வெறிக்கு எதிராகப் போராடியதற்காக 1964ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்குக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us