தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/லப் டப்..... லப் டப்.....

லப் டப்..... லப் டப்.....

லப் டப்..... லப் டப்.....


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் மார்பின் இடப் பக்கம் கை வைத்தால் இதயத்தின் துடிப்பை உணர முடியும். நமக்கு நான்கு அறைகள் கொண்ட ஒரே இதயம்தான் இருக்கிறது. இங்கே, விதவிதமான இதய அமைப்புகளைக் கொண்ட வெவ்வேறு உயிரினங்களை பற்றி பார்க்கலாம்.

* பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் இதயத்தில் நான்கு அறைகள் உண்டு. தவளையின் இதயத்திலோ மூன்றே அறைகள்தான்!

* மனித இதயத்தின் சராசரி எடை 300 கிராம். மிகப்பெரிய விலங்கான திமிங்கிலத்தின் இதய எடை சராசரியாக 500 கிலோ. அது ஒரு கார் (car) அளவுக்குப் பெரியதாக இருக்கும்.

* மண்புழுவுக்கு இதயம் என்கிற உறுப்பே இல்லை!

* வரிக்குதிரை மீன் (Zebra Fish சீப்ரா பிஷ்) இதயத் திசுக்கள் சிதைந்தால் மீண்டும் வளரும் இயல்பு கொண்டவை. வெட்டப்பட்ட, பல்லியின் வால் எப்படி மீண்டும் உருவாகிறதோ அதைப் போல வரிக்குதிரை மீன்களால் இதயத் தசைகளை மறுபடியும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

* மூன்று இதயங்களைக் கொண்ட உயிரினம் ஆக்டோபஸ் (Octopus).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us