PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
கால்பந்து வீரர் மெஸ்சி, உலக கோப்பை (2014) கால்பந்து ஃபைனல் வரை அர்ஜென்டினா அணியை அழைத்துச் சென்றார். தவிர, கோபா அமெரிக்கா (2007, 2015) தொடரிலும் இரு முறை கோப்பை வெல்லும் வாய்ப்பைப் பறிகொடுத்தார். இந்த முறை, 'எப்படியாவது வெற்றி பெறவேண்டும்' என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், சிலியிடம் ஃபைனலில் தோல்வியடைந்த சோகத்தில், 'சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன்' என்று அறிவித்துவிட்டார். இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 113 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 55 கோல் அடித்துள்ளார்.
