PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி, கும்ளே உள்ளிட்டோர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதிலிருந்து குறிப்பிட்ட நபர்களிடம் சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) ஆலோசனைக் குழு நேர்முகத் தேர்வு நடத்தியது. தங்களது அறிக்கையை இந்தக் குழு பி.சி.சி.ஐ.யிடம் தந்தது. இதை அடுத்து புதிய பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ளே நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 132 டெஸ்டில் பங்கேற்று இருக்கும் கும்ளே, 619 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
