PUBLISHED ON : மார் 19, 2018

அ நிறம் | அளவு
இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாகப் பணியாற்றியவர்களுக்கே மத்திய அரசு அல்லது மாநில அரசின் உயர் பதவிகளை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பாதுகாப்புத் துறையில் எழுந்துள்ள ஊழியர்கள், வீரர்கள் பற்றாக்குறையைக் குறைக்க நாடாளுமன்ற நிலைக்குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. இனிவரும் காலங்களில் அரசின் உயர்பதவியான கெசட்டட் தகுதி கொண்ட பதவிகளுக்கு, ராணுவத்தில் கட்டாயமாக 5 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை ஆகும்.
