sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

மனம் குவியும் இசை: ரோசின் குளியல்: விடுபட்ட சொற்களைக் கண்டுபிடிக்கவும்

/

மனம் குவியும் இசை: ரோசின் குளியல்: விடுபட்ட சொற்களைக் கண்டுபிடிக்கவும்

மனம் குவியும் இசை: ரோசின் குளியல்: விடுபட்ட சொற்களைக் கண்டுபிடிக்கவும்

மனம் குவியும் இசை: ரோசின் குளியல்: விடுபட்ட சொற்களைக் கண்டுபிடிக்கவும்


PUBLISHED ON : மே 12, 2025

Google News

PUBLISHED ON : மே 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயதான ____________(1) மரத்தின் உடலில் பொன் நிறத்தில் ரெசின் (Resin) என்னும் பிசுபிசுப்பான திரவம் வடியும். இது நாளடைவில் காற்று பட்டு ____________(2). இந்தக் கடினமான ரெசின், மரத்தில் இருந்து உடைத்து எடுக்கப்படும். இதோடு சில ____________(3) சேர்க்கப்பட்டு ரோசின் (Rosin) என்னும் சோப்புக்கட்டி போன்ற சிறிய செவ்வக அல்லது வட்டவடிவக் கட்டி தயாரிக்கப்படும். வயலின், வியோலா, செலோ, டபுள் பேஸ், சாரங்கி, தில்ருபா உள்ளிட்ட போயிங் கருவிகளின் போ-வில் (Bow) இது பயன்படும். நாம் தினமும் காலையில் சோப்பு போட்டுக் குளிப்பது போல போ-வுக்கு அவ்வப்போது ____________(4)குளியல் தேவைப்படும்.

போ-வில் உள்ள ____________(5) முடிக்கற்றை மீது ரோசின் கட்டி முன்னும் பின்னும் அழுந்தத் தேய்க்கப்படும். இதனால் பௌடர் போன்ற வெண்ணிறத் துகள் ரோசினில் இருந்து உதிரத் தொடங்கும். ரோசின் துகள் ____________(6) கொண்டது. எனவே குதிரை முடிக்கற்றை மீது ஒட்டிக்கொள்ளும். ரோசின் துகள் போ-வில் மேலிருந்து கீழ்வரை சரிசமமாகத் தடவப்படும்.

துகள் போதுமான அளவு ஒட்டியுள்ளதா எனப் பரிசோதிக்க ____________(7) கலைஞர், குதிரை முடியைத் தனது விரல்நுனியால் லேசாகத் தொட்டுப் பார்ப்பார். துகள் விரல் நுனியில் ஒட்டினால் ரோசின் போதுமான அளவு உள்ளதாகப் பொருள்.

வயலின் கலைஞர், வயலின் வாசிக்க ____________(8) மீது ரோசின் தடவப்பட்ட குதிரை முடிக்கற்றையைத் தேய்ப்பார். இதனால் உலோகத் தந்திக்கும் ரோசின் துகள் படர்ந்த குதிரை முடிக்கற்றைக்கும் இடையே____________ (9) (Friction) ஏற்படும். இதனால் ஒலி அதிர்வு உண்டாகி ____________(10) பிறக்கும்.

விடைகள்:

1. பைன்

2. இறுகிவிடும்

3. ரசாயனங்கள்

4. ரோசின்

5. குதிரைவால்

6. பசைத்தன்மை

7. வயலின்

8. தந்திகள்

9. உராய்வு

10. இசை






      Dinamalar
      Follow us