PUBLISHED ON : டிச 23, 2024

1. மேளகர்த்தா ராகங்கள் என்றால் என்ன?
2. கர்நாடக சங்கீதத்தில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன?
3. சங்கராபரணம் எத்தனையாவது மேளகர்த்தா ராகம்?
4. சங்கராபரணத்துக்கு இணையான மேற்கத்திய கிளாஸிக்கல் ஸ்கேல் எது?
5. சங்கராபரணத்துக்கு இணையான இந்துஸ்தானி ராகத்தின் பெயர் என்ன?
6. சங்கராபரணம் இசை தெரபியில் எதற்குப் பயன்படுகிறது?
7. சங்கராபரணம் எந்த இந்துக் கடவுளைக் குறிக்கிறது?
8. ஸ்புரிதம் என்றால் என்ன?
9. மேளகர்த்தா ராகக் கலவையில் உருவாகிய ஜன்ய ராகங்கள் (குழந்தை ராகங்கள்) எத்தனை?
10. மேலை இசையில் ஆக்ஸிடண்டல் நோட் என்றால் என்ன?
11. 'ஆக்ஸிடண்டல் நோட்' ராகங்கள் கர்நாடக இசையில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
12. இசை மாணவர்களுக்குச் சுலபமாகப் புரியும் 15வது மேளகர்த்தா ராகத்தின் பெயர் என்ன?
13. சுத்த ஸ்வரங்கள் (ஸ, ரி, க, ம, ப, த, நி) எப்படித் தோன்றின?
14. ரிஷபத்தின் மூன்று வகை?
15. மத்யமம் (ம) மேற்கத்திய இசையின் எந்த நோட்டுக்கு (note) இணையான ஸ்வரம்?
விடைகள்:
1. கர்நாடக சங்கீதத்தில் உள்ள பல நூறு ராகங்களின் 72 மூல ராகங்கள், 'மேளகர்த்தா' எனப்படுகிறது.
2. 72,
3. 29வது மேளகர்த்தா ராகம்
4. D major
5. பிலவால்
6. மன மகிழ்ச்சி ஏற்படுத்த
7. சிவன் அணியும் ஆபரணம் எனப் பொருள்படும் சங்கராபரணம் சிவனைத் துதிக்க உதவும்
8. வயலினின் ஒரு ஸ்வரத்தை வாசிக்கும் விரலை டக்கென எடுத்து அதற்கு முன் உள்ள ஸ்வரத்தை இசைத்து அழகு சேர்ப்பது
9. சுமார் ஆயிரம் ராகங்களுக்கு மேல்
10. ஒரு ராகத்துக்குத் தொடர்பில்லா ஸ்வரம் ஒன்று எதிர்பாராமல் இடையில் வருவதை மேலை இசையில் இவ்வாறு அழைக்கின்றனர்
11. பஷங்க ராகங்கள்,
12. மாயா மாளவகெளலா
13. விலங்குகள், பறவைகள் எழுப்பும் சத்தங்களில் இருந்து
14. சுத்த ரிஷபம் (ரி1), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), ஷாட்ருஷி ரிஷபம் (ரி3)
15. சுத்த மத்யமம் (ம1) - F, பிரதி மத்யமம் (ம2) - F#