
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து, ரூ.346 கோடி மதிப்பிலான டீசல் பேருந்துகளைத் தயாரித்து, வினியோகிப்பதற்கான ஆணையைப் பெற்று உள்ளதாக, எந்த நிறுவனம் தெரிவித்துள்ளது?
அ. டாடா மோட்டார்ஸ்
ஆ. அசோக் லேலண்டு
இ. ஜே.பி.எம். ஆட்டோ
ஈ. எய்ச்சர் மோட்டார்ஸ்
2. நடப்பாண்டில் தங்கத்தின் விலை, எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளதாக, உலக தங்க கெளன்சில் தெரிவித்துள்ளது?
அ. 25
ஆ. 15
இ. 30
ஈ. 10
3. ராணுவ சட்டத்தைப் பிரகடனம் செய்த, எந்த நாட்டின் அதிபரான யூன் சுக் இயோலை பதவி நீக்க வலியுறுத்தி, அந்த நாட்டு பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்?
அ. தென்கொரியா
ஆ. சியோல்
இ. வடகொரியா
ஈ. தைவான்
4. சமீபத்தில் உடல்நலக் குறைவால் மறைந்த, உலகப் புகழ்பெற்ற இந்திய தபேலா இசைக் கலைஞர்?
அ. ரவிசங்கர்
ஆ. பிஸ்மில்லா கான்
இ. உஸ்தாத் ஜாகிர் உசேன்
ஈ. பீம்சென் ஜோஷி
5. கலைகள் மற்றும் கலாசார பிரிவுகளில், தேசிய அளவில் சாதித்த மாணவர்களுக்கு, எந்தக் கல்வி நிறுவனத்தில் சிறப்புப் பிரிவு சேர்க்கை, வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது?
அ. அண்ணா பல்கலைக்கழகம்
ஆ. சென்னைப் பல்கலைக்கழகம்
இ. பாரதியார் பல்கலைக்கழகம்
ஈ. சென்னை ஐ.ஐ.டி.
6. தமிழ் மொழிக்கான இந்த ஆண்டின், 'சாகித்ய அகாடமி' விருது, யார் எழுதியுள்ள, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் - -1908' என்ற ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது?
அ. ஆ.இரா.வேங்கடாசலபதி
ஆ. எம்.வெங்கடாச்சலம்
இ. பி.சுப்ரமணியம்
ஈ. ஆர்.பாலகணபதி
7. வெளிநாடுகளில் வேலை செய்து, தாயகத்திற்குப் பணம் அனுப்புவோர் பட்டியலில், 2024ஆம் ஆண்டில், எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?
அ. சீனா
ஆ. இந்தியா
இ. நேபாளம்
ஈ. பாகிஸ்தான்
8. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து, சமீபத்தில் ஓய்வை அறிவித்துள்ள இந்திய வீரர்?
அ. ஹர்ஷித் ராணா
ஆ. ரவீந்திர ஜடேஜா
இ. சூர்யகுமார் யாதவ்
ஈ. ரவிச்சந்திரன் அஷ்வின்
விடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. அ, 7. ஆ, 8. ஈ.