PUBLISHED ON : டிச 23, 2024

இங்கு ஓர் எண் வரிசையில் நான்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்று குறிப்புகள், ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒன்று மட்டும் தொடர்பில்லாதது. அதைக் கண்டறிந்து நீக்குங்கள், காரணம் விடையில் கொடுக்கப்பட்டுள்ளது.
1) ருக்பத், நுண்கி, அஸ்செல்லா, அல்டெபரான்.
2) அடகாமா, கோபி, படகோனிய பாலைவனம், மோன்டே.
3) WISE 0855-0714, PSO J318.5-22, CFBDSIR 2149-0403, HD 110067 d.
4) ஜானகி அம்மாள், ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, ஸ்டீவன் ஹாக்கிங்.
5) ஜுனோ, வாயேஜர் 1, வாயேஜர் 2, வீனஸ் எக்ஸ்ப்ரஸ்.
விடைகள்:
1) அல்டெபரான் - ரிஷப ராசி மண்டலத்தைச் சேர்ந்த நட்சத்திரம். மற்றவை தனுசு ராசி மண்டலத்தைச் சேர்ந்தவை.
2) கோபி - இது ஆசியாவில் உள்ள பாலைவனம். மற்றவை தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ளவை.
3) HD 110067 d - ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கோள். மற்றவை சுதந்திரமானவை (Rogue planets). எந்த நட்சத்திரத்தையும் சுற்றி வராத கோள்கள்.
4) ஜானகி அம்மாள் - தாவர விஞ்ஞானி. பிறர் விண்ணியல் விஞ்ஞானிகள்.
5) வீனஸ் எக்ஸ்ப்ரஸ் - வெள்ளி கோளுக்கு அனுப்பப்பட்ட விண்கலம். மற்றவை வியாழன் உள்ளிட்ட தொலைதூர கோள்களை ஆராய அனுப்பப்பட்டவை.