PUBLISHED ON : பிப் 24, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சட்ஜமம் என்கிற ஸ்வரம் எந்தப் பறவையின் ஒலியில் இருந்து உருவானது?
2. ஸ்வரத்தைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தை ஸ்வர். இதன் பொருள் என்ன?
3. உச்சஸ்தாயி, கீழ்ஸ்தாயி, மத்தியஸ்தாயி ஆகியவை எந்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன?
4. பொ.யு.மு. 200 - பொ.யு. 200 காலகட்டத்தில் உருவான எந்த சாஸ்திரத்தில், எத்தனையாவது அத்யாயத்தில் ஸ்வரங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது?
5. 'ஷட்ஜஸ்ய ரிஷபக்ஷைவ காந்தாரோ மத்யமஸ்ததாஹ பஞ்சமோ தைவதஸ்சைவ சப்தமோத நிஷாதவான்'
என்கிற சப்த ஸ்வரங்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஸ்லோகம், நாட்டிய சாஸ்திரத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடைகள்:
1. மயில்
2. சத்தம் எழுப்புதல்
3. சாமவேதம்
4. நாட்டிய சாஸ்திரம் 28 ஆவது அத்யாயம்
5. தத்ர ஸ்வரா

