PUBLISHED ON : அக் 17, 2016
அ நிறம் | அளவு
தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்கும் வகையில், புதிய மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் திறன், தகுதி, மாணவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றை, இந்த செயலி மூலம், கல்வி அதிகாரிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது, அதை தலைமை ஆசிரியர், புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்வார்; அதோடு, தலைமை ஆசிரியரின் மதிப்பீடும், அதில் உள்ளீடு செய்யப்படும். இதை, கல்வி அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பார்கள்.
