PUBLISHED ON : அக் 17, 2016
அ நிறம் | அளவு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், புதிய அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை, பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின், காணொலி காட்சி மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர். கூடங்குளத்தில், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியோடு, ஏற்கெனவே இரண்டு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, மேலும் இரண்டு அணு உலைகள், அமைக்கப்படுகின்றன. இதன் திட்டமதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாய், இதுதவிர, மேலும் 8 புதிய அணு உலைகளை அமைக்கும் திட்டத்தை, ரஷ்யாவிடம் முன்வைத்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
