sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 08, 2026 ,பங்குனி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

/

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி


PUBLISHED ON : அக் 10, 2016

Google News

PUBLISHED ON : அக் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாந்தி: ஏய் மஞ்சு! கையில கறுப்பு மை பாட்டிலோட கோபமா எங்க போற?

மஞ்சு: என்னைய தடுக்காத சாந்தி. என்னோட எதிர்ப்ப காட்ட மை தெளிக்கப் போறேன். யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்.

சா : என்ன பிரச்னை? யார்கிட்ட எதிர்ப்ப காட்டணும்? அதுக்கு ஏன் கறுப்பு மை?

ம : எதிர் வீட்ல இருக்குற அங்கிள் என் சைக்கிள்ல குப்பை கொட்டிட்டுட்டாரு. அதான் அவர் மேல மை தெளிக்கப் போறேன்.

சா : எதிர்ப்பக் காட்ட மை தெளிக்கணும்ன்னு உனக்கு யார் சொன்னது? எல்.கே.ஜி. பசங்க மாதிரி செய்யாத மஞ்சு.

ம : நீ இன்னும் அப்டேட் ஆகவே இல்ல? இப்போலாம் பெரிய பெரிய ஆட்களை எதிர்க்க மை தெளிக்குறதுதான் ட்ரெண்ட்.

சா : அதெல்லாம் தப்பு மஞ்சு! 4,600 வருஷங்களுக்கு முன்னால கண்டுபிடிச்ச மையை கலவரத்துக்காகப் பயன்படுத்துறீங்களே. ச்ச்ச்சே!

ம : எத்தனை வருஷம் ஆனா என்ன? பேனாவ ஆயுதம்ன்னு சொன்னா, அதுக்குள்ள இருக்குற மைகூட ஓர் ஆயுதம்தான்!

சா : ஆனா, அந்த ஆயுதங்கள வச்சுதான் எழுத்துகள் தோன்றிய புதுசுல குகைகள்ல மனுஷங்க எழுதுனாங்க. அப்புறம் புகைக்கரி, எலும்பு பசை, விளக்கெண்ணெய் சேர்ந்த கலவையை வைத்து சீனர்கள் மையைக் கண்டுபிடிச்சாங்க.

ம : இதுகூட சீனாவா? சீனாக்காரங்க தயாரிச்ச பொருள் 4,000 வருஷத்துக்கும் மேல இருக்குறதே ஆச்சரியம்தான்!

சா : இந்தியாவிலயும் 2,400 ஆண்டுகளாக மை பயன்படுத்திட்டு வர்றாங்க. அந்த மையை, 'மசி'ன்னு சொன்னாங்க.

ம : சாந்தி! உன்னோட பேச்சுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். என்னோட எதிர்ப்பக் காட்ட வேற ஐடியா சொல்லு?

சா : 'குப்பைய இந்த மாதிரி தெருவுல போடாதீங்க அங்கிள்'ன்னு சொல்லு. அதுவே பெரிய எதிர்ப்புதான்.

ம : எதிர்ப்பக் காட்ட அஹிம்சை வழில போகச் சொல்ற. இது எனக்கு சத்திய சோதனை!






      Dinamalar
      Follow us