உள்ளடக்கத்திற்கு செல்ல

நாடாளுமன்றத்துக்கு கொசுக்களை எடுத்துச் சென்ற எம்.பி.,
நாடாளுமன்றத்துக்கு கொசுக்களை எடுத்துச் சென்ற எம்.பி.,
PUBLISHED ON : செப் 12, 2016

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஸிகா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. டேவிட் ஜோலி எனும் குடியரசு கட்சி எம்.பி., ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என, தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று, அவர் 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து நாடாளுமன்றத்துக்கு எடுத்து வந்து, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இது எம்.பி.,க்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
