உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 12, 2016

அ நிறம் | அளவு
ரிலையன்ஸ் நிறுவனம் தனது, 'ஜியோ' மொபைல் ஃபோன் வர்த்தக சேவையை, செப்டம்பர் 5ஆம் தேதி அன்று, நாடு முழுவதும் துவக்கியது. வரும் டிசம்பர் வரை, அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இன்டர்நெட் டேட்டா' சேவைகள் அனைத்தும் இலவசம் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சலுகை காலத்துக்குப் பிறகும், எஸ்.டி.டி., லேண்ட் லைன், மொபைல் ஃபோன் உள்ளிட்ட அனைத்து அழைப்புகளையும் இலவசமாக வழங்கி, இன்டர்நெட்டுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்கள் கட்டணங்களைக் குறைத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முயன்று வருகின்றன.
