sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இந்தியாவின் வனமகன் 'முலாய்'

/

இந்தியாவின் வனமகன் 'முலாய்'

இந்தியாவின் வனமகன் 'முலாய்'

இந்தியாவின் வனமகன் 'முலாய்'


PUBLISHED ON : செப் 18, 2017

Google News

PUBLISHED ON : செப் 18, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அது 2008ம் ஆண்டு. அசாம் மாநிலம் கோகிலமுக் பகுதி. வனப்பகுதிக்குள் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாகக் கிளம்பி வேறிடத்துக்குச் சென்றுவிட்டன. அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக, வனத்துறையினர் அந்த யானைக் கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த யானைக் கூட்டம் மிக வளமான வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அந்த வனப்பகுதியைப் பார்த்த வனத்துறையினருக்கு மிகுந்த அதிர்ச்சி. காரணம், அதற்கு முன்னர் அங்கு அப்படியோர் வனப்பகுதி இல்லை. எந்த ஓர் அரசாங்கப் பதிவேட்டிலும் அது வனப்பகுதி என்பதற்கான பதிவுகள், ஆதாரங்கள் இல்லை. பிரம்மபுத்ரா நதிக்குள் வெறும் மணல் திட்டாக இருந்த பகுதி அது. அங்கு எப்படி இவ்வளவு பெரிய வனப்பகுதி உருவானது என்பதுதான் அவர்களுக்கு ஆச்சரியம்.

சுமார் 1,360 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த அந்த வனப்பகுதியை உருவாக்கியவர் ஒரு தனிமனிதர். அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டம் மிசிங் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங்தான் அவர். தற்போது அவருக்கு 54 வயதாகிறது. 1979ம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதில், ஏராளமான பாம்புகளும், ஊர்வனவும் அடித்து வரப்பட்டு, உயிரிழந்த நிலையில் கிடந்தன. காடு அழிப்புதான் இதன் மையப்பிரச்னை என புரிந்துகொண்டபோது ஜாதவ் பயேங்குக்கு 16 வயது.

அந்தக் காலகட்டத்தில், சமூகக் காடு வளர்ப்புத் திட்டத்தை வனத்துறை செயல்படுத்தி வந்தது. வனத்துறையை அணுகினார் ஜாதவ். பிரம்மபுத்ரா நதியின் நடுவில் இருந்த 1,360 ஏக்கர் மணல் திட்டில் காடு வளர்க்க வனத்துறையின் உதவியைக் கேட்டார் ஜாதவ். “அந்த மணல்திட்டில் மூங்கிலைத் தவிர வேறெதுவும் வளராது. வேண்டுமானால், மூங்கிலை வளர்க்க முயற்சி செய்யுங்கள்” என்பதுதான் வனத்துறையின் பதிலாக இருந்தது.

அங்கு மூங்கிலை நட்டு வளர்க்க முயற்சி செய்தார் ஜாதவ். ஓரளவே பலன் இருந்தது. மற்ற மர விதைகள் எதுவும் முளைக்கவில்லை. காடுவளர்ப்புத் திட்டத்தில் பலரும் மரக்கன்றுகளை நட்டுவிட்டு சென்று விட, இவர் மட்டும் அங்கேயே தங்க, வனத்துறையின் அனுமதியைக் கேட்டார். வனத்துறையும் அனுமதித்தது.

மணல் திட்டை வளப்படுத்த ஜாதவ் ஒரு புதிய முயற்சியைக் கையிலெடுத்தார். சிவப்பு எறும்புகளை பல இடங்களில் இருந்தும் கொண்டு வந்து, அந்த மணல்திட்டுகளில் விட்டார். சிவப்பு எறும்புகள் மண்ணை வளப்படுத்தும் என ஜாதவ் நம்பினார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.

அவை அங்கு பல்கிப் பெருகி, மணல்திட்டை வளப்படுத்தின. ஜாதவ் பயேங் ஏராளமான மரவிதைகளை ஊன்றி, அவற்றை வளர்த்துக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் அப்படி ஒரு நபர், காட்டை பராமரித்துக் கொண்டிருப்பதையே வனத்துறை மறந்து விட்டது. அந்தப் பக்கம் யாரும் எட்டிப்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள். வெளிஉலகுக்குத் தெரியாமல் 1,360 ஏக்கர் பரப்பில் ஒரு காடு உருவாகிவிட்டது. ஏராளமான விலங்குகள், பறவைகளுடன் அடர்த்தியான வனப்பகுதி உருவாகிவிட்டது. அங்குதான் அந்த யானைக் கூட்டம் வந்து சேர்ந்தது. அதன் பிறகே, ஜாதவ் பயேங்கின் மகத்தான சாதனை வெளி உலகுக்குத் தெரியவந்தது.

தனி மனிதர் காட்டை உருவாக்கியிருக்கிறார். ஒரு சமூகம் செய்யாததை, வனத்துறை செய்யாததை, அரசு செய்யாததை, தனி மனிதர் செய்திருக்கிறார்.

ஜாதவ் பயேங்கின் மகத்தான சாதனையைப் பாராட்டி, 2012ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 'இந்தியாவின் வனமனிதன்' என்று பட்டம் வழங்கிப் பாராட்டியது. இந்திய அரசு, 2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

அந்த வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். திரைப்படங்களும் எடுக்கப்படுகின்றன. ஜாதவ் பயேங் பற்றி கதைப்புத்தகமும் வெளியாகி இருக்கிறது. இன்று அந்த வனப்பகுதி, முலாய்க் காடுகள் என்றே அழைக்கப்படுகிறது. ஆம்! ஜாதவ் பயேங்கின் செல்லப் பெயர் முலாய்.

ஜாதவ் பயேங்: இந்தக் காட்டை வனத்துறை நன்றாகப் பராமரிக்கும் என உறுதியளித்தால், நான் வேறொரு பகுதியில் காட்டை உருவாக்கச் சென்றுவிடுவேன்.






      Dinamalar
      Follow us