PUBLISHED ON : மார் 31, 2025

1. 'பாஸ் டிரம்' (Bass Drum) என்றால் என்ன?
காலில் வாசிக்கும் இந்த டிரம், பாஸ் டிரம் எனப்படுகிறது. ஷூ அணிந்த கால் பாதத்தால் உலோக லீவரை அழுத்தினால், தரையில் செங்குத்தாகப் பொருத்தப்பட்டுள்ள பாஸ் டிரம் மீது ஒரு மரச் சுத்தியல் அடித்து சத்தம் எழுப்பும். இந்தச் சத்தத்தை, டிரம்ஸ் தாளத்துடன் லயம் மாறாமல் டிரம்மர் இணைப்பார். பாஸ் டிரம்மைத் தனியாகவும் பயன்படுத்த முடியும்.
2. எந்த நாட்டைச் சேர்ந்தது?
துருக்கி.
3. இந்தியாவில் இதன் முக்கியத்துவம்?
இந்தியக் குடியரசு தின ராணுவ அணிவகுப்புகளில் இந்தத் தாள வாத்தியம் கட்டாயம் இடம்பெறும்.
4. இது எதனால் செய்யப்படுகிறது?
17, 18ஆம் நூற்றாண்டுகளில் பாஸ் டிரம்மில் விலங்குத் தோல் பயன்பட்டது. நவீன பாஸ் டிரம்மிற்குக் கடினமான வழுவழு பிளாஸ்டிக் காகிதம் பயன்படுகிறது.
5. எந்த ஐரோப்பிய இசை மேதை இதை சிம்பொனி இசையில் பயன்படுத்தினார்?
மொசார்ட் உள்ளிட்ட கிளாஸிக்கல் இசையமைப்பாளர்கள் தங்கள் சிம்பொனி இசையில் பாஸ் டிரம்மைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால், பாஸ் டிரம் சிம்பொனி ஆர்கஸ்ட்ராவுக்குள் நுழைந்து, குறுகிய காலத்தில் புகழ்பெறத் தொடங்கியது.